வோடபோன் ஐடியா நிறுவனம் ஏற்கனவே ஓரிரு ஆண்டு முழுவதும் திட்டங்களை வழங்கி வரும் நிலையில்,, இப்போது மேலும் இரண்டு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரான வோடபோன்-ஐடியா (Vi) ஒரு ஆண்டு வேலிடிட்டியுடன் கூடிய இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களின் விலை ரூ.2999 மற்றும் ரூ.2899 ஆகும். மேலும், சில போஸ்ட்பெய்டு திட்டங்களின் கட்டணங்களையும் Vi நிறுவனம் குறைத்துள்ளது.
இந்த புதிய இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களும் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் அன்லிமிடேட் வாய்ஸ் கால், எக்கச்க்க டேட்டா இன்னும் பல வசதிகளுடன் வழங்கப்படுகிறது.
புதிய வோடபோன் பிளான்கள்:
Vodafone Idea ரூ.2999 பிளானானது, ஒரு வருடம் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் மொத்தம் 850GB 4G டேட்டா, அன்லிமிடேட் வாய்கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதலாக, இந்த திட்டம் அன்லிமிடேடட் இரவு டேட்டாவை வழங்குகிறது. அதாவது, இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவசமாக டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது. தினசரி டேட்டா லிமிட் பற்றி கவலைப்படாமல் பயனர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம்.
2899 மதிப்புள்ள இரண்டாவது புதிய வோடபோன் ஐடியா திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால்,மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இரண்டு திட்டங்களின் வேலிடிட்டி 365 நாட்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த பிளானும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிடேடட் இரவு டேட்டாவையும் வழங்குகிறது. குறிப்பாக, வார இறுதி டேட்டா மிச்சம் இருந்தால், அது அடுத்த முறைக்கு சேர்த்துக்கொள்ளலாம். அத்துடன் கூடுதல் கட்டணமின்றி ஒவ்வொரு மாதமும் 2ஜிபி வரையிலான பேக்கப் டேட்டா வழங்கப்படுகிறது.
Airtel Cricket பிளான்கள் மாற்றம்.. புதிய ரீசார்ஜ் விவரங்கள் இதோ..
கூடுதல் விவரங்கள்:
இந்தத் திட்டங்களைத் தவிர, வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ. 3099 மதிப்பிலான மற்றொரு வருடாந்திரத் திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டம் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால், Vi Hero பலன்கள், 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா ஆகியவற்றை 365 நாட்களுக்கு வேலிடிட்டியுடன் வருகிறது.