Airtel Cricket பிளான்கள் மாற்றம்.. புதிய ரீசார்ஜ் விவரங்கள் இதோ..

By Dinesh TG  |  First Published Dec 4, 2022, 4:40 PM IST

ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்டு கிரிக்கெட் பிளான்களை மாற்றி அமைத்துள்ளது. ஏற்கெனவே இருந்த பிளான் என்ன, அதில் எந்தவிதமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறித்து இங்குக் காணலாம்


ஏர்டெல் நிறுவனம் இதற்கு முன்பு Disney+ Hotstar சந்தாவுடன் கூடிய பிளான்களை வழங்கி வந்தது. தற்போது அதற்குப் பதிலாக Amazon Prime சந்தாவை வழங்குகிறது. அதேபோல், மொத்தம் நான்கு கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. அவை: ரூ.699, ரூ.999, ரூ.2999 மற்றும் ரூ.3,359 ஆகும். 

இவற்றில் ரூ.699 மற்றும் ரூ.999 திட்டங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை இதுவரை வழங்கியுள்ளன. ஆனால், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இப்போது Amazon Prime சந்தாவால் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஏர்டெல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, புதுப்பிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் சலுகைகளை இங்கே பார்க்கலாம்:

Tap to resize

Latest Videos

ஏர்டெல் ரூ.699 கிரிக்கெட் பிளான்: பலன்கள்

ஏர்டெல் ரூ.699 கிரிக்கெட் ப்ரீபெய்ட் பிளான் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஒரு நாளைக்கு 3 ஜிபி மொபைல் டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். மேலும், 56 நாட்களுக்கு இலவச அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை வழங்குகிறது. மற்ற பலன்களில், ஏர்டெல் எக்ஸ்ட்ரீமுக்கான 56 நாட்கள் இலவச சந்தா, 3 மாதங்கள் அப்பல்லோ 24|7 சர்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவை உள்ளன.

ஏர்டெல் ரூ.999 கிரிக்கெட் பிளான்: பலன்கள்

ஏர்டெல் ரூ.999 கிரிக்கெட் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடேட் வாய்ஸ் கால் ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த பிளான் 84 நாட்கள் செல்லுபடியாகும். இதுவும் Airtel Xtream, 3 மாதங்கள் Apollo 24|7 சர்கிள், இலவச hellotunes மற்றும் Wynk Music பலன்கள் உள்ளன.

மிகக்குறைந்த விலையில் Infinix 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஏர்டெல் ரூ.3,359 கிரிக்கெட் பிளான்: பலன்கள்

ஏர்டெல் ரூ.3,359 கிரிக்கெட் ப்ரீபெய்ட் பிளான் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால் டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. மேலும்,  ஒரு வருட அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் மற்றும் ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.2,999 கிரிக்கெட் பிளான்: பலன்கள்

ஏர்டெல் ரூ.2,999 கிரிக்கெட் பிளான் 365 நாட்கள் செல்லுபடியாகும். இந்த பிளான் அன்லிமிடேட் அழைப்புகளுடன் ஒரு நாளைக்கு 2 ஜிபி மொபைல் டேட்டாவை வழங்குகிறது.ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மற்ற பலன்களில் 3 மாதங்கள் அப்பல்லோ 24|7 சர்களி், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவை அடங்கும். ஏர்டெல் ரூ.2,999 கிரிக்கெட் திட்டத்தில் OTT சந்தாக்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!