டுவிட்டர், ஃபேஸ்புக்கை போல், ஷேர்சாட்டிலும் ஆட் குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது சுமார் நூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பேஸ்புக், டுவிட்டர் போல் அதிகளவு பிரபலமாக இருக்கும் சமூக வலைதளம் ஷேர்சாட் ஆகும். தற்போது இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமானோர் ஷேர்சாட்டில் உள்ளனர். கிட்டத்தட்ட வாட்ஸ்அப்க்கு இணையான எண்ணிக்கையிலான பயனர்கள் ஷேர்சாட்டில் உள்ளனர். 180 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் செயலில் உள்ளனர்.
இந்த நிலையில், ஷேர்சாட் அதன் பணியாளர்களில் 5 சதவீதத்தை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், Jeet11 எனப்படும் விளையாட்டு தளத்தையும் மூடிவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஷேர்சாட்டின் Jeet11 ஆனது Dream11 மற்றும் MPL (மொபைல் பிரீமியர் லீக்) போன்ற பிற விளையாட்டு தளங்களுக்கு போட்டியாக இருந்தது. ShareChat ஆனது Twitter, Google, Snap மற்றும் Tiger Global ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்டு வந்தது. ஷேர்சேட் நிறுவனத்தில் சுமார் 2300 ஊழியர்கள் உள்ளனர்.
பணிநீக்கம் குறித்த ஷேர்சாட்டின் செய்திதத்தொடர்பாளர் கூறுகையில், "ஒரு வழக்கமான பிஸ்னஸ் நடைமுறையாக, நாங்கள் எங்கள் உத்திகளை அவ்வப்போது மதிப்பீடு செய்து வருகிறோம். அந்த வகையில், நாங்கள் Jeet11 இன் செயல்பாடுகளை நிறுத்துகிறோம், மேலும், சில நிர்வாக செயல்பாடுகளை மறுசீரமைத்துள்ளோம். அதாவது இந்த பிஸ்னஸ் முன்னேற்றத்தில் சில பணியாளர்களை பணி நீக்கம் செய்வதும் இருக்கும். அதுவும் வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவான பணியாளர்களிடத்தில் மட்டுமே இந்த தாக்கம் உள்ளது" என்றார்.
Redmi Note 11 ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு!
மொத்தம் உள்ள 2300 பணியாளர்களில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஷேர்சாட் அனைத்து தரப்பு பயனர்களிடையேயும் பிரபலமானது. இது பல இந்திய மொழிகளை ஆதரிக்கிறது. குறிப்பாக இது கிராமப்புற மக்களும் எளிதில் இந்த செயலியை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ShareChat என்பது ShareChat, Moj மற்றும் Moj Lite+ போன்ற பயன்பாடுகளின் தாய் நிறுவனமாகும். இந்தியாவில் TikTok தடைசெய்யப்பட்ட பிறகு, Moj தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
2015 ஆம் ஆண்டில் அங்குஷ் சச்தேவா, பானு பிரதாப் சிங் மற்றும் ஃபரித் அஹ்சன் ஆகியோரால் ஷேர்சாட் நிறுவப்பட்டது. தொடக்கத்தில் வெறும் உள்ளடக்கத்தை பகிரக்கூடிய தளமாக இருந்தது. பின்னர், இது பயனர்களுக்கு அவர்களுடைய சொந்த உள்ளடக்கத்தை உருவாக்க சிறிய வாய்ப்பை வழங்கியது. பின்னர், 2016 ஆம் ஆண்டில் இன்னும் மெருகேற்றப்பட்டு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது.