WhatsApp போட்டோஸ், வீடியோக்களை டெலிட் ஆகிவிட்டதா.. இப்படி செய்தால் திரும்பவும் பெறலாம்!

By Dinesh TG  |  First Published Dec 4, 2022, 1:26 PM IST

வாட்ஸ்அப் செயலியில் படங்கள், வீடியோக்கள் டெலிட் ஆகிவிட்டால், அதை மீட்டெடுப்பதற்கான வசதியும் உள்ளது. அதை எப்படி மீட்டெடுப்பது என்பது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்


WhatsApp என்பது உலகம் முழுவதும் யார் எங்கிருந்தாலும், அவர்களை தொடர்புகொள்வதற்கான மெசேஜ் தளமாகும். படங்கள், ஆவணங்கள், லொகேஷன், ஆடியோ மற்றும் வீடியோ கால்கள், சாதாரண மெசேஜ், வாய்ஸ் மெசேஜ், வீடியோ மெசேஜ் என பல்வேறு சேவைகளை இது வழங்குகி பயனர்களுக்கு உதவுகிறது. 

ஆனால் சிலருக்கு போனில் மெமரி போதுமான அளவில் இல்லாதபோது, WhatsApp செயலியில் வந்த படங்கள், வீடியோக்களை டெலிட் செய்கின்றனர். இதன் விளைவாக பல குறிப்பிடத்தக்க படங்கள் மற்றும் வீடியோக்களை இழக்க வேண்டியுள்ளது. இன்னும் சிலர், அவ்வாறு டெலிட் செய்த படங்கள் மற்றும் வீடியோக்களை மீண்டும் பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கான வழிமுறைகளும் வாட்ஸ்அப்பில் உள்ளன. அதை இங்கு பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

போன் கேலரி:

இயல்பாக, வாட்ஸ்அப் செயலியானது படங்கள், வீடியோக்கள் அனைத்தையும் ஃபோனில் உள்ள கேலரியில் சேமிக்கிறது. எனவே, நீங்கள் வாட்ஸ்அப் மெசேஜில் உங்கள் மீடியாவை டெலிட் செய்தாலும், அவை போனில் உள்ள கேலரி, கூகுள் போட்டோஸ் அல்லது iOS போட்டோஸ் ஆகியவற்றில் அப்படியே இருக்கும்.

வாட்ஸ்அப் மீடியா ஃபோல்டர்:

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு போனில் உள்ள வாட்ஸ்அப் மீடியாவில் இருந்து, டெலிட் செய்த படங்கள், வீடியோகளை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்கு, file explorer programme சென்று, Root Directory சென்று, வாட்ஸ்அப் ஃபோல்டரைப் பார்க்கவும். வாட்ஸ்அப் படங்கள் அனைத்தும் இந்த ஃபோல்டரில் இருக்கும். Sent Folder சென்று டெலிட் செய்யப்பட்ட புகைப்படம் அல்லது பிற கோப்புகளைக் கண்டறியலாம்.

உஷாாார்… Netflix பெயரில் நூதன மோசடி.. ரூ. 1 லட்சத்தை இழந்ததாக போலீசில் புகார்!!

Google Drive அல்லது iCloud மூலம் WhatsApp பேக்அப் செய்யலாம்.

iOS பயனர்களுக்கான iCloud, Android பயனர்களுக்கு Google Drive என இரண்டு விதமான கிளவுட் சேமிப்பகம் நடைமுறையில் உள்ளது. அதாவது, உங்கள் வாட்ஸ்அப் படங்கள், வீடியோக்கள், கோப்புகள் அனைத்தும் கூகுள் டிரைவில் தானாகவே சேமிக்கப்படும். நீங்கள் வாட்ஸ்அப்பில் டெலிட் செய்திருந்தால் கூட, கூகுள் டிரைவ், ஐகிளவுட் ஆகியவற்றில் இருந்து அவற்றை மீட்டெடுக்க முடியும். ஆனால், அதற்கு நீங்கள் வாட்ஸ்அப் செட்டிங்ஸில் ஏற்கெனவே, வாட்ஸ்அப் கோப்புகளை பேக்அப் செய்வதற்கான ஆப்ஷனை ஆன் செய்திருக்க வேண்டும். 

எப்படி ரீஸ்டோர் செய்வது?

வாட்ஸ்அப்பை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு, மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டும். அப்போது, நீங்கள் வைத்திருந்த வாட்ஸ்அப் எண் எண்டர்செய்து, Restore என்று கொடுக்க வேண்டும். இப்போது, நீங்கள் டெலிட் செய்த அனைத்தும் அப்படியே மீண்டும் வந்துவிடும்.
 

click me!