‘இந்த இடங்களில் 5ஜி டவர் வைக்க வேண்டாம்’ Airtel, Jio நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனம் அட்வைஸ்

By Dinesh TGFirst Published Dec 2, 2022, 10:08 PM IST
Highlights

விமானப் பாதுகாப்பு கருதி, விமான நிலையங்களுக்கு அருகில் 5G சேவைகளை நிறுவ வேண்டாம் என்று ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களை DoT கேட்டுக் கொண்டுள்ளது.

ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட டெலிகாம் ஆபரேட்டர்கள் இந்தியா முழுவதும் தங்கள் 5ஜி நெட்வொர்க் கவரேஜை விரிவுபடுத்தி வருகின்றனர். டெல்லி, மும்பை, வாரணாசி மற்றும் பல நகரங்களில் 5G சேவை கிடைக்கிறது. ஆனால், 5G அமல்படுத்தப்பட்ட நகரங்களாக இருந்தாலும், விமான நிலையத்தின் அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் 5Gக்காக சிறிது நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில், விமான நிலையங்களுக்கு அருகில் 5G அடிப்படை நிலையங்களை நிறுவ வேண்டாம் என்று தொலைத்தொடர்புத் துறை (DoT) தொலைத்தொடர்பு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு ஒரு சுற்றிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், 2.1 கிலோமீட்டர் பரப்பளவில் 3.3-3.6 Ghz அலைவரிசையில் 5G பேஸ் ஸ்டேஷன்களை நிறுவ வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய விமான நிலையங்களின் ஓடுபாதையின் மையக் கோட்டிலிருந்து 910 மீட்டர்கள் மற்றும் ஓடுபாதையின் இரு முனைகளிலிருந்தும் இடையகப் பகுதியில் 5ஜி தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏர்டெலானது தற்போது டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர், வாரணாசி, பானிபட், குருகிராம் மற்றும் கவுகாத்தி ஆகிய 11 நகரங்களில் 5ஜி சேவையை அமல்படுத்தியுள்ளது.  குறிப்பாக விமான நிலையங்களிலும் விரிவுபடுத்தியுள்ளது. 

விமான நிலையங்களில் உள்ள பயணிகள் வருகை மற்றும் புறப்படும் டெர்மினல்கள், ஓய்வறைகள், போர்டிங் கேட்கள், கவுண்டர்கள், பாதுகாப்புப் பகுதிகள், பேக்கேஜ் க்ளைம் பெல்ட்கள், பார்க்கிங் ஏரியா போன்ற இடங்களில் 5ஜி கொண்டு வரப்பட்டுள்ளது. 

Realme 10 Pro ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக களமிறங்கும் Redmi Note 12 Series

இவ்வாறு விமான நிலையங்களுக்கு அருகில் 5ஜி கொண்டு வரப்படும் போது, அது விமானத்திலுள்ள ரேடியோ ஆல்டிமீட்டரை பாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விமான போக்குவரத்தில் எந்தவித தடையுமின்றி, முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக அந்த இடங்களில் 5ஜி வேண்டாம் என்று கூறப்படுகிறது.

ஜியோவைப் பொறுத்தவரையில், டெல்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் பிற முக்கிய நகரங்களான பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட டெல்லி-என்சிஆர் இடங்களில் 5G சேவைகளை அறிமுகப்படுத்தியது. பின்பு, மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி, சென்னை, புனே ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி கொண்டு வரப்பட்டுள்ளது.
 

click me!