இந்தியாவில் ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள நிலையில், அதற்குப் போட்டியாக ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ரியல்மியும், ஷாவ்மியும் எப்போதும் ஒன்றுக்கொன்று போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். ஏதாவது ஒன்றில் விலை குறைப்பு செய்யப்பட்டால், அதே போல் மற்ற ஸ்மார்ட்போனிலும் ஆஃபர் அறிவிக்கப்படும். அந்த வகையில், ஏற்கெனவே ரியல்மி நிறுவனம் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்தது.
ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனானது 5ஜி தொழில்நுட்பத்தில், வளைந்த டிஸ்ப்ளே, 120 Hz ரெப்ரெஷ் ரேட், 7.95mm தடிமன், 173g எடையுடன் வருகிறது. இந்த நிலையில், ரியல்மிக்குப் போட்டியாக ஷாவ்மி நிறுவனமும் ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிகிறது.
ஷாவ்மி நிறுவனம் நோட் சீரிஸ் தொடங்கி 8 ஆண்டுகள் நிறைவுசெய்து ஆகிவிட்டது. அதன் நிறைவு ஆண்டை முன்னிட்டு ஷாவ்மி நிறுவனத்தின் முதன்மை மார்கெட்டி அதிகாரி அனுஜ் ஷர்மா தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்தியாவில் நோட் சீரிஸ் வெற்றிகரமாக 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 72.4 மில்லியன் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டுள்ளன.
மிகக்குறைந்த விலையில் Infinix 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!
ஷாவ்மி தரப்பில் வெளிவரும் முன்னனி ஸ்மார்ட்போன்கள் நோட் சீரி்ஸ் தான். அடுத்த நோட் சீரிஸ், அதாவது நோட் 12 சீரிஸ் விரைவில் வரும். அதில் 5ஜி நெட்வொர்க் இருக்கும். நோட் சீரிஸ் தயாரிப்பில் நாங்கள் இரண்டு தாராக மந்திரத்தைப் பின்பற்றுகிறோம். ஒன்று புதிய தொழில்நுட்பத்தை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது, இரண்டாவது, அதுவும் பட்ஜெட் விலையில் கொண்டு போய் சேர்ப்பது. இந்த இரண்டு மந்திரத்தால் உருவாக்கப்பட்டது தான் நோட் சீரிஸ்’ என்றார்.
மேலும், ஷாவ்மி தரப்பில் வெளிவரும் டீசர்களின்படி, இந்த மாதத்திற்குள்ளாக ரெட்மி நோட் 12 சீரிஸ் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மியில் என்ன அம்சங்கள் உள்ளனவோ, அதே அம்சங்கள் ரெட்மியிலும் எதிர்பார்க்கலாம். ரெட்மி நோட் 12 சீரிஸில் என்னென விதமான சிறப்பம்சங்கள் இருக்கும், எந்தவிதமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து அடுத்தடுத்து வரும் நாட்களில் தெரியவரும்.