மிகக்குறைந்த விலையில் Infinix 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

By Dinesh TG  |  First Published Dec 1, 2022, 11:27 PM IST

இன்பினிக்ஸ் நிறுவனம் வெறும் 12 ஆயிரம் ரூபாய்க்கு 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்குக் காணலாம்.


பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டான இன்ஃபினிக்ஸ் தற்போது இரண்டு புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் ஹாட் சீரிஸை விரிவுபடுத்தும் வகையில், இன்ஃபினிக்ஸ் ஹாட் 20 ப்ளே, ஹாட் 20 5ஜி போன்ற புதிய போன்களுடன் ஹாட் 20 சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது

ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் விற்பனைக்கு வருகின்றன. 5G பிரிவில் முதல் போன் ஹாட் 20 5G ஆகும். இந்த போனில் LED ஃபிளாஷ் பொருத்தப்பட்ட செல்ஃபி கேமராக்கள், 18W டைப் சி சார்ஜிங் வசதி, அபரிமிதமான பேட்டரி சக்தியுடன் வருகிறது.

Tap to resize

Latest Videos

இதுகுறித்து இன்பினிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனிஷ் கபூர் கூறுகையில், “இன்ஃபினிக்ஸ் எப்போதும் அதன் தயாரிப்புகளை அர்த்தமுள்ள வகையில் பொதுமக்களுக்கு வழங்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். HOT 20 Play மற்றும் HOT 20 5G மூலம்

வாடிக்கையாளர்களுடன் வலுவான தொடர்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Infinix Hot 20 Play, Hot 20 5G: விலை விவரங்கள்:
 

Infinix Hot 20 Play மற்றும் HOT 20 5G ஆகியவை ரூ. 8999 மற்றும் ரூ.11999 விலையில் அறிமுகமாகியுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 7ஜிபி ரேம் (4ஜிபி ரேம் மற்றும் 3ஜிபி விரிவாக்கக்கூடிய ரேம்) மற்றும் 64ஜிபி மெமரியுடன் வருகிறது. இதில் ஹாட் 20 ப்ளே ஸ்மார்ட்போனானது மூன்று வண்ணங்களில் வருகிறது. அவை: லூனா ப்ளூ, அரோரா கிரீன் மற்றும் ரேசிங் பிளாக் ஆகும்.  அதேசமயம் HOT 20 5G ஆனது ஸ்பேஸ் ப்ளூ, பிளாஸ்டர் கிரீன் மற்றும் ரேசிங் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கும். 

மிகக்குறைந்த விலையில் 6.51 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரியுடன் Vivo Y02 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Infinix Hot 20 Play, Hot 20 5G: சிறப்பம்சங்கள்:

Infinix Hot 20 Play ஸ்மார்ட்போனில் 6.82-இன்ச் HD+ பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரெவ்ரெஷ் ரேட், 120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் ஆகியவை உள்ளன. இதேபோல், ஹாட் 20 5G ஸ்மார்ட்போனில் 6.6-இன்ச் FHD+ ஹைப்பர்விஷன் கேமிங் டிஸ்ப்ளே, 120Hz அல்ட்ரா-ஹை ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் உள்ளன.

Hot 20 Play ஆனது Octa Core G37 கேமிங் பிராசசரும்,  Hot 20 5G ஸ்மார்ட்போனில்  6nm Dimensity 810 பிராசசரும் உள்ளது.
 

click me!