ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது கம்ப்யூட்டர் மானிட்டர் தயாரிப்பில் களம் இறங்கியுள்ளது. வரும் டிசம்பர் 12 ஆம் தேதி OnePlus Monitor X27, OnePlus Monitor E24 மானிட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது.
ஸ்மாரட்போன் தயாரிப்பில் முன்னனி இடத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் இருந்து வருகிறது. ஸ்மார்ட்போனை தவிர டிவி தயாரிப்பிலும் நல்லதொரு பெயரை பெற்றுள்ளது. இந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்டமாக டெஸ்க்டாப் மானிட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, OnePlus நிறுவனம் புதிதாக இரண்டு டெஸ்க்டாப் மானிட்டர்களை வரும் டிசம்பர் 12 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. அவை: OnePlus Monitor X27 மற்றும் OnePlus Monitor E24 ஆகும்.
ஒன்பிளஸ் பிராண்ட் பிரியர்கள் இந்த மானிட்டர்களை OnePlus அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று "நோட்டிபிக்கேஷன்" செய்து விருப்பத்தைத் தெரிவிக்கலாம். புதிய OnePlus மானிட்டர்கள் பணி நிமித்தமாகவும், கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது பல்வேறு வகையான பயனர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
OnePlus Monitor X27 பிரீமியம் தோற்றத்தில் உள்ளது. கேமிங் பயனர்களுக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும். இது 27 அங்குல திரை அளவுடன் கிடைக்கும். இதேபோல், OnePlus Monitor E24 என்பது ஒரு பட்ஜெட் விலையியல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 24 அங்குல திரை அளவுடன் கிடைக்கும்.
இந்த இரண்டு மானிட்டர்களிலும் எந்தவிதமான நுட்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது, என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பது குறித்த முழுமையான விவரங்கள் அடுத்தடுத்து வரும் நாட்களில் தெரியவரும். டிசம்பர் 12 ஆம் தேதி மானிட்டர் அறிமுகமானவுடன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழுமையான விவரங்கள் பட்டியலிடப்படும்.
மிகக்குறைந்த விலையில் 6.51 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரியுடன் Vivo Y02 ஸ்மார்ட்போன் அறிமுகம்!
கடந்த சில ஆண்டுகளாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளை உலகளாவிய வரத்தகத்தில் விரிவுபடுத்தி வருகிறது. இதனால் அதன் சந்தை மதிப்பும், தர மதிப்பும் உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து தனது பயணத்தைத் தொடங்கியது, பின்னர் ஆடியோ மற்றும் ஸ்மார்ட் வியரபில்ஸ் துறையில் தடத்தை பதித்தது. 2019 ஆம் ஆண்டில், நிறுவனம் ஸ்மார்ட் டிவி துறையில் இறங்கியது.
ஒன்பிளஸ் நிறுவனம் கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி, இந்தியாவின் முதல் மூன்று ஸ்மார்ட் டிவி பிராண்டுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாகவும், ஆண்டின் முதல் பாதியில் 123 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறுகிறது.