சாம்சங் நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள தனது R&D நிறுவனங்களில் சுமார் 1,000 பொறியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஸ்மார்ட்போன், டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் நம்பர் ஒன் இடத்தில் சாம்சங் நிறுவனம் இருந்து வருகிறது. இந்தியாவில் அதன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பட்ஜெட் விலை முதல் பிரீமியம் வரையில் எக்கச்சக்க வகையான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், சாம்சங் நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையில், சுமார் 1,000 பொறியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்தள்ளது. ஆனால், சாம்சங்கின் ஆய்வு நிலையங்கள் பெங்களூர், நொய்டா மற்றும் டெல்லி உள்ளிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே உள்ளன. பெங்களூரில் உள்ள சாம்சங்கின் செமிகண்டக்டர் இந்தியா ஆராய்ச்சிக் குழுவிற்கும் ஆட்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
இந்தியாவில் உள்ள சாம்சங் ஆராய்ச்சி மையங்கள் மல்டி-கேமரா தீர்வுகள், தொலைக்காட்சிகள், டிஜிட்டல் பயன்பாடுகள், 5G, 6G மற்றும் அல்ட்ரா-வைட்பேண்ட் வயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ் புரோட்டோகால் போன்ற துறையில் சுமார் 7,500க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை சாம்சங் நிறுவனம் பெற்றுள்ளது. இதில் பல காப்புரிமைகள் சாம்சங் நிறுவனத்தின் பிரதான கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், நெட்வொர்க் உபகரணங்கள் மற்றும் டிஜிட்டல் பயன்பாடுகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
சாம்சங் நிறுவனம் தேர்வுசெய்யும் புதிய பொறியாளர்கள் வரும் 2023 ஆண்டில் பணியில் சேருவார்கள்.செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், ஆழ்நிலை கற்றல், படச் செயலாக்கம், IoT, கனெக்டிவிட்டி, கிளவுட், பெரிய தரவு, வணிக நுண்ணறிவு, முன்கணிப்பு பகுப்பாய்வு, தொடர்பு நெட்வொர்க்குகள், ஒரு சிப் (SoC) மற்றும் சேமிப்பக தீர்வுகள். போன்ற நவீன யுக தொழில்நுட்பங்களில் பணியாற்றும் வகையில், புதிய பொறியாளர்கள் பணியமர்த்துவதற்கு சாம்சங் திட்டமிட்டுள்ளது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய கிளைகள் (AI, ML, Computer Vision மற்றும் பல), தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், கருவிகள், எம்பெடெட் சிஸ்டம்ஸ் மற்றும் தொடர்பு நெட்வொர்க்குகள் போன்ற பல ஸ்ட்ரீம்களில் இருந்து பொறியாளர்களை Samsung நியமிக்கும். இது தவிர, கணிதம் & கம்ப்யூட்டிங் மற்றும் மென்பொருள் பொறியியல் போன்ற ஸ்ட்ரீம்களிலிருந்தும் வெளியேறும் பொறியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
குறிப்பாக ஐஐடி மெட்ராஸ், ஐஐடி டெல்லி, ஐஐடி ஹைதராபாத், ஐஐடி பாம்பே, ஐஐடி ரூர்க்கி, ஐஐடி காரக்பூர், ஐஐடி கான்பூர், ஐஐடி குவஹாத்தி மற்றும் ஐஐடி பிஎச்யு போன்ற சிறந்த ஐஐடிகளில் இருந்து சுமார் 200 பொறியாளர்களை Samsung R&D மையங்களில் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.