சிலிண்டர் புக் பண்ண போறீங்களா? உங்களுக்கான ஆஃபர்!

By Dinesh TG  |  First Published Nov 30, 2022, 2:49 PM IST

Paytm செயலி மூலம் எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது. இதில் முன்பதிவு செய்வது எப்படி, டிராக் செய்வது எப்படி என்பது குறித்து இங்குக் காணலாம்.


பாரத் கேஸ், இண்டேன் மற்றும் HP கேஸ் சிலிண்டர் ஆகியவற்றில் LPG சிலிண்டர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு Paytm செயலி அட்டகாசமான கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது. அதன்படி, முதன்முறையாக புக் செய்யப்படும் சிலிண்டருக்கு ரூ.15 கேஷ்பேக் மற்றும் Paytm Wallet வழியாக சிலிண்டரை முன்பதிவு செய்தால் ரூ.50 வரை கேஷ்பேக் வழங்குகிறது. கூடுதலாக, புக் செய்ததை டிராக் செய்யவும் இதில் வசதிகள் உள்ளன.

கடந்த செவ்வாய் கிழமையன்று, LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் அனைத்து புதிய பயனர்களுக்கும் அற்புதமான கேஷ்பேக் சலுகைகளை பேடிஎம் அறிவித்தது. புதிய பயனர்கள் "FIRSTGAS" குறியீட்டைப் பயன்படுத்தி ரூ.15 கேஷ்பேக் பெறலாம். அதனுடன் பயனர்கள் "WALLET50GAS" என்ற குறியீட்டைப் பயன்படுத்தி, Paytm Wallet மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் ரூ. 50 வரை கேஷ்பேக் பெறலாம்.

Latest Videos

undefined

கட்டண முறையில், ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்களைப் பயன்படுத்தி எளிதாகவும் சிலிண்டர் புக் செய்யலாம். சிலிண்டர் முன்பதிவு செய்வது எப்படி, அவ்வாறு முன்பதிவு செய்யப்பட்ட சிலிண்டர்களின் டெலிவரியை கண்காணிப்பது என அனைத்தும் பேடிஎம் செயலியில் உள்ளது.
குறிப்பாக, முதன்முதலில் முன்பதிவு செய்தபிறகு, நீங்கள் உள்ளிட்ட விவரங்களை அப்படியே பேடிஎம் செயலி சேமித்துக்கொள்ளும். இதனால் அடுத்த முறை முன்பதிவு செய்யும் போது, பயனர்கள் அந்த 17 இலக்க எல்பிஜி எண்னை தேடி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

WhatsApp Update: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அம்சம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது!

Paytm மூலம் உங்கள் LPG சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள்: 

  • படி 1: Paytm செயலியைத் திறந்து, ரீசார்ஜ்கள் மற்றும் பில் பேமெண்ட்ஸ் பிரிவின் கீழ் 'Book Gas Cylinder' என்ற மெனுவுக்குச் செல்லவும்.
  • படி 2: இப்போது LPG சிலிண்டர் கம்பெனியைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்/ 17 இலக்க LPG ஐடி/நுகர்வோர் எண்ணை உள்ளிடவும்.
  • படி 3: உங்கள் முன்பதிவைத் உறுதிசெய்து, தொடரவும். பின்பு, Paytm Wallet, Paytm UPI, கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் போன்ற உங்களுக்கு வசதிக்கு ஏற்ப கட்டண முறைகள் மூலம் நீங்கள் பணம் செலுத்தலாம்.
  • மேலும், பேடிஎம் செயலியில் Paytm போஸ்ட்பெய்டு முறை மூலம் சமையல் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்து, வட்டியில்லாமல் அடுத்த மாதம் பணம் செலுத்தலாம். 
  • படி 4: உங்கள் முன்பதிவு உறுதிசெய்யப்பட்டு, நீங்கள் பதிவுசெய்துள்ள முகவரிக்கு அடுத்த 2-3 நாட்களுக்குள் அருகிலுள்ள கேஸ் ஏஜென்சியால் உங்கள் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.
     
click me!