விவோ நிறுவனத்தின் புத்தம் புதிய Vivo Y02 ஸ்மார்ட்போன் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ஸ்லிம்மான ஸ்டைலிஷான ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் முன்னனி நிறுவனம் விவோ ஆகும். இந்தாண்டு தொடக்கத்தில் விவோ Y01 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது. அது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலயில் தற்போது, விவோ Y02 என்ற ஸ்மார்ட்போன் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.51-இன்ச் HD+ டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 12 கோ எடிசன், Funtouch OS 12 ஆகியவை உள்ளன. பின்பக்கத்தில் 8 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, முன்பக்கத்தில் 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா, 5000mAh சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஏற்ப 10W சார்ஜர் உள்ளன.
விரல்ரேகை தடம் தெரியாத மென்மையான சாம்பல் நிற மேற்பரப்பைக் கொண்டுள்ளது, மேலும் நீலம் கலந்த நீல ஊதா நிறத்துடனும் வருகிறது. விவோ தரப்பில் அதன் அதிகாரப்பூர்வ வேரியண்ட் Cosmic Grey மற்றும் Orchid Blue வண்ணங்கள் ஆகும். 3GB+32GB மாடலின் விலை இந்திய மதிப்பில் சுமார் 7,785 ரூபாய் ஆகும். இது இந்தோனேசியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் வெளியானது!
Vivo Y02 ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள்: