இந்தியாவில் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி Realme 10 Pro+ ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் விலை விவரங்கள் கிடைத்துள்ளன.
ரியல்மி பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த Realme 10 Pro+ வரும் டிசம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இதற்கு முன்பு வெளியான ரியல்மி போனின் வெற்றியைத் தொடர்ந்து, Realme 10 Pro+ ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
இந்த நிலையில், ரியல்மியின் துணைத்தலைவர் மாதவ் சேத் தனது டுவிட்டர் பக்கத்தில் ரியல்மி 10 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் குறித்து வேடிக்கையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரவிருக்கும் Realme 10 Pro+ ஸ்மார்ட்போனை 25 ஆயிரம் ரூபாய்க்குள் கொண்டு வருவதற்கு படாதபாடு படுவதாக மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, போனின் விலை 25 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும், வளைந்த முனையுடன் பிரீமியம் தோற்றத்தில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Kudos to our product team for figuring this one out. pic.twitter.com/A5DZNMyWek
— Madhav Sheth (@MadhavSheth1)
Realme 10 Pro+ 5G ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் வளைந்த OLED Full-HD+ டிஸ்ப்ளேவுடன் 120Hz ரெவ்ரெஷ் ரேட், 800 nits நல்ல பிரைட்னஸ், HDR10+ அம்சத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இதில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 பிராசசர் இருக்கலாம் என்றும், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
OnePlus ஸ்மார்ட்போனுக்கு 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி!
Realme 10 Pro+ போனின் பின்புறத்தில் 108MP மெகா பிக்சல் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பு இருக்கலாம். முன்பக்கத்தில் செல்ஃபி கேமரா 16 மெகா பிக்சலுடன் இருக்கலாம். 5000mAh பேட்டர சாியும், அதற்கு சார்ஜ் செய்ய USB Type-C போர்ட் இருக்கும்.
ரியல்மி 10 Pro+ ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 8GB ரேம் + 128GB மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை CNY 1,699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 19,400) ஆகும். இதே போல் , 8GB + 256GB விலை CNY 1,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.22,90) மற்றும் 12GB + 256GB ஸ்மார்ட்போனின் விலை CNY 29,90 (இந்திய மதிப்பில் சுமார்ரூ 26,300 ஆகும்.