WhatsApp Update: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அம்சம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது!

By Dinesh TG  |  First Published Nov 28, 2022, 11:21 PM IST

வாட்ஸஅப்பில் Message Yourself என்ற அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது என்ன அம்சம், இதனால் என்ன பலன், பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த முழுமையான விவரங்களை இங்குக்காணலாம்.


மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலியில் இப்போது "மெசேஜ் யுவர்செல்ஃப்" என்ற புதிய அம்சம் வந்துள்ளது. இது எந்த சிரமமும் இல்லாமல் குறிப்புகளை எடுத்துக் கொள்ளவும், ரிமைன்டர்கள் அமைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப்பிலேயே மெசேஜ்கள், படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோவை சேமித்துக் கொள்ள முடியும். எளிதில் எடுத்து பார்க்கவும் முடியும்.

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு என இரு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் இந்த’Message yourself’அம்சம் வந்துள்ளது. மேலும், இந்த அம்சம் கிடைக்காதவர்களுக்கு வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்பதையும் வாட்ஸ்அப் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது, எனவே, மெசேஜ் யுவர்செல்ஃப் ஆப்ஷன் இல்லாதவர்கள், தங்களது வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து பார்த்து உறுதிசெய்துகொள்ளவும்.

Latest Videos

undefined

WhatsApp செயலியில் Message Yourself ஆப்ஷனைப் பெற, Google Play Store அல்லது Apple App Store இலிருந்து உங்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்யவும். பின்பு, வாட்ஸ்அப் செயலியைத் திறந்து, புதிய சேட் உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும், அதில் வரும் Contacts -களில் உங்களுடைய வாட்ஸ்அப் எண்ணைப் பார்க்க முடியும். அதைத் தேர்ந்தெடுத்தால் போதும், உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பலாம்.

இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்களுடன் முக்கிய குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ள முடியும், மேலும் அவர்கள் செயலியில் உள்ள பிற சேட்டிலிருந்து ஒரு மெசேஜை அல்லது மல்டிமீடியா கோப்பை அனுப்பலாம். வாய்ஸ் நோட்ஸ் மெசேஜ்களை பதிவு செய்யலாம். வாட்ஸ்அப்பில் நண்பர்கள் அனுப்பியுள்ள புகைப்படங்களைக் கிளிக் செய்து அவற்றை நீங்களே உங்களுக்கு ஃபார்வேர்டு செய்து சேமித்து வைத்திருக்கலாம்.

WhatsApp Update: புதிய வகையான ஸ்டேட்டஸ் உட்பட 3 அப்டேட்கள் வருகிறது!

அடிக்கடி நோட்ஸ் எடுக்க விரும்பும் பயனர்களுக்கு, இம்முறை ஒரு நல்ல வசதியாகும். இந்த அம்சம் டெஸ்க்டாப் மற்றும் WhatsApp Web என அனைத்து தளங்களிலும் வேலை செய்கிறது. இதனால், நீங்கள் எந்த டிவைஸில் நோட்ஸ் எடுத்தாலும், அதை மற்றொரு டிவைஸில் இருந்து பார்க்க முடியும். இதுபோன்ற அம்சம் டெலகிராம் செயலியில் ஏற்கெனவே இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்பு வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயிலில் ‘ஸ்கிரீன் லாக்’ அம்சம் கொண்டு வரப்பட்டது. அதாவது, கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் போது, அந்த திரையை லாக் செய்ய முடியும். இதன் மூலம், பயனர்கள் வாட்ஸ்அப்பை பாதுகாப்பாக வைக்க முடியும். பயனர்களைத் தவிர மற்றவர்கள் வாட்ஸ்அப்பை திறக்க முடியாது. இதனால், தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்கள் நோட்டமிடவும் முடியாது.
 

click me!