அட்டகாசமான அம்சங்களுடன் Xiaomi 13 Series விரைவில் அறிமுகம்!

By Dinesh TGFirst Published Nov 28, 2022, 7:07 PM IST
Highlights

வரும் டிசம்பர் 1 ஆம் தேதி ஷாவ்மி 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின்றன. இதில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

நீண்ட நாட்களாக ஷாவ்மி பிரியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த Xiaomi 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகிறது. இந்த சீரிஸில் வெண்ணிலா Xiaomi 13 மற்றும் Xiaomi 13 Pro ஆகியவை அடங்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை ஷாவ்மி நிறுவனம் இதுவரையில் மறைத்து வைத்துள்ளது. இருப்பினும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 SoC பிராாசர் இருக்கலாம் என்று லீக் ஆகியுள்ளது. அறிமுக நிகழ்வின் போது, ​​Xiaomi MIUI 14, Xiaomi Buds 4 மற்றும் Xiaomi Watch S2 ஆகியவையும் அறிமுகப்படுத்தப்படும்.

இதுதொடர்பாக Xiaomi Weibo தளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, Xiaomi 13 சீரிஸ் ஆனது சீனாவில் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு (4:30 pm IST) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Xiaomi 13 மற்றும் Xiaomi 13 Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் முதற்கட்டகமாக அறிமுகமாகின்றன. கூடுதலாக, இந்த அறிமுக நிகழ்வின் போது MIUI 14 வெளியிடப்படும். வரவிருக்கும் Xiaomi 13 சீரிஸானது ஆண்ட்ராய்டு 13 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல்,  சீனாவில் Xiaomi 13 சீரிஸ் உடன் Xiaomi Watch S2 அறிமுகமாக உள்ளது . இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒரு வட்ட வடிவத்திலான, ஸ்டைலான பார்களுடன் வருகிறது. ஸ்போர்ட்ஸ் மோடு, ஹெல்த் மேனேஜ்மெண்ட் செட்டிங்ஸ்  ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கூடுதலாக, Xiaomi Buds 4 ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்போன்களும் அறிமுகம் செய்யப்படுகிறது. 

13MP கேமரா, 5,000mAh பேட்டரியுடன் Lava Blaze Nxt அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!

இந்தியாவில் ஷாவ்மி 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போது வரும் என்பது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை. இதற்கு முன்பு வெளியான ஷாவ்மி 12 சீரிஸ் விட ஓரளவு மேம்பட்ட அம்சங்கள் இருக்கலாம். ஷாவ்மி 12 சீரிஸ் ஸ்மார்ட்போனில் அமோலெட் டிஸ்ப்ளே, 120Hz ரெவ்ரெஷ் ரேட், டால்பி விஷன், HDR10+ ஆகியவை இருந்தது. ஆண்ட்ராய்டு 12, குவால்காம் SM8450 ஸ்னாப்டிராகன் 8 Gen 1 (4 nm) பிராசசர் இருந்தது.

அதோடு ஒப்பிடுகையில், தற்போது வெளிவர உள்ள ஷாவ்மி 13 சீரிஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 SoC  இருப்பதாக தெரிகிறது. மேலும், பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, ஷாவ்மி 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் சில அம்சங்கள் உட்புகுத்தப்பட்டு, அதற்கு ஏற்ப விலை உயர்த்தப்பட கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!