Instagram, Youtube-க்கு போட்டியாக வீடியோ தளத்தில் களமிறங்கும் Jio

By Dinesh TGFirst Published Nov 28, 2022, 6:33 PM IST
Highlights

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் ஆகியவற்றுக்குப் போட்டியாக ஜியோ நிறுவனமும் Jio Jumps என்ற பெயரில் ஷார்ரட் வீடியோக்களை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக். யூடியூப் ஆகிய தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஷார்ட்ஸ் வீடியோக்களை டெவலப் செய்து வருகின்றன. குறிப்பாக யூடியூப் நிறுவனம் ஷார்ட் வீடியோவுக்காக சுமார் 100 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில், ரீல்ஸ். யூடியூப் ஆகியவற்றுக்குப் போட்டியாக ஜியோ நிறுவனமும் ஒரு ஷார்ட்ஸ் வீடியோ தளத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

ஜியோவின் இந்த புதிய ஷார்ட்ஸ் வீடியோ தளத்திற்கு ‘Jio Jumps’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராமின் ரீல்கள் எவ்வாறு செயல்படுகின்றனவோ, அதே போல் இந்த ஜியோ ஆப்ஸ் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வெளிவந்துள்ள செய்திகளின்படி, ரோலிங் ஸ்டோன்ஸ் இந்தியா, கிரியேட்டிவ்லேண்ட் ஆசியா மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த புதிய வீடியோ தளத்தை உருவாக்க உள்ளன. இந்த ஷார்ட்ஸ் செயலியானது, ஆரோக்கியமான முறையில் வீடியோக்களை ரீச் அடைய செய்யும் வகையில் உருவாக்கப்படுகிறது. 

மேலும், வீடியோக்கள் மூலம் கிரியேட்டர்கள் நிலையான லாபம் ஈட்டும் விதமான சூழல் அமைப்புடன் கூடிய, திரை நட்சத்திரங்கள், பிரபலங்களை சார்ந்த பொழுதுபோக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Google Message: அட்டகாசமான அப்டேட்.. இனி பேசினாலே போதும்.. மெசேஜ் டைப் ஆகி விடும்!

கிரியேட்டர்ஸ், பாடகர்கள், நடிகர்கள், இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், நகைச்சுவை நடிகர்கள், பேஷன் டிசைனர்கள் மற்றும் கலாச்சார மாற்றத்திற்கு வித்திட விரும்பும் அனைவரையும் உள்ளடக்கியதாக இந்த ஜியோ ஷார்ட்ஸ் வீடியோக்கள் இருக்கும். அழைப்பு முறையில் முதலில் நூறு பேருக்கு ஜியோ ஜம்ப்ஸில் சேரும்படி அழைக்கப்படுவார்கள். அவர்கள் சேர்ந்த பிறகு, சோதனை முறையில் ஜியோ ஜம்ப்ஸ் இயங்கும். பிறகு, பொது பயனர்களுக்கான பயன்பாட்டிற்கு அமலுக்கு வரும்.

இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டராக இப்போது இருக்கும் 'ஜியோ'வின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பது ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு ஆகும். ஜியோ செயலியில் உள்ள ஜியோ சினிமா, ஜியோ மீடியா, ஜியோ என்டர்டெயின்மென்ட், டிஜிட்டல் செயலிகள் ஆகியவை ஜியோ பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 

அவை அனைத்திற்கும் மூல சக்தியாக ‘ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவன’த்தின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு ஆகும். அதே உள்கட்டமைப்பின் உதவியுடன் தற்போது ஜியோ ஜம்ப்ஸ் கொண்டு வரப்படுகிறது.வரும் ஜனவரி மாதம் ‘ஜியோ ஜம்ப்ஸ்’ கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. 

click me!