ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி? இப்படி..

By Dinesh TG  |  First Published Nov 27, 2022, 12:20 PM IST

ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இரட்டை வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்தலாம். இதை செட் செய்வது எப்படி. பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.


உலகின் மிகவும் பிரபலமான செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். ஒரு வாட்ஸ்அப் பயனர் உலகில் எங்கிருந்தாலும், இன்டெர்நெட் மூலம் அவருக்கு மெசேஜ் அனுப்பவோ அல்லது கால் செய்யவோ முடியும்.  பேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்தச் செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனர்கள் இலவசமாக பதிவிறக்கலாம், மொபைல் போன் அல்லது டெஸ்க்டாப்களில் பயன்படுத்தலாம். ஒரு ஃபோன் நம்பருக்கு ஒரு WhatsApp கணக்கை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் உள்ளன. 

இருப்பினும், பயனர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இரண்டு வாட்ஸ்அப்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.  Xiaomi , Samsung , Vivo , Oppo , Huawei , Honor , OnePlus மற்றும் Realme உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் இந்த டூயல் வாட்ஸ்அப் அம்சம்ங்கள் உள்ளது. ஸ்மார்ட்போன் வாரியாக டூயல் வாட்ஸ்அப்  இயக்குவதற்கான ஆப்ஷனை கீழ்கண்ட முறையில் பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

undefined

Xiaomi ஸ்மார்ட்போன்: Settings > Apps > Dual apps. 

Samsung  ஸ்மாரட்போன்: Settings > Advance features > Dual Messenger. 

Vivo பயனர்கள்:  Settings > Apps and notifications > App Clone. 

Oppo பயனர்கள்:  Settings > App Cloner. 

Huawei மற்றும் Honor ஸ்மார்ட்போனில், Settings > Apps > App twin. 

OnePlus ஸ்மார்ட்போன் -  Settings > Utilities > Parallel Apps. 

Realme போனில்:  Settings > App management > App cloner.

இப்போது, ​​​​ஒரு ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது இங்கே காணலாம்:

வாட்ஸ்அப்பில் இரண்டாவது கணக்கை இயக்க, அமைப்புகளுக்குச் செல்லவும் .
டூயல் ஆப்ஸ், ஆப் குளோன், ஆப் ட்வின் அல்லது பேரலல் ஆப்ஸ் ஆகியவற்றைப் பார்க்கவும். இந்த ஆப்ஷனின் பெயர் நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனைப் பொறுத்து மாறுபடும்/ வாட்ஸ்அப் பெயரில் இருக்கும் ஐகான் இருக்கும், அது தான் இரண்டாவது வாட்ஸ்அப். அதை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

இப்போது ஸ்மாரட்போனின் மெயின் மெனு அல்லது ஹோம் ஸ்கிரீனில் ஒருவித அடையாளத்துடன் இரண்டாவது வாட்ஸ்அப் ஐகான் பார்க்கமுடியும். இதுதான் வாட்ஸ்அப்பின் மற்றொரு பதிப்பு. அதைத் திறக்கவும்,

இப்போது எந்த நம்பருக்கு நீங்கள் வாட்ஸ்அப் வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த எண்னை உள்ளிடவும். முக்கியமாக அந்த எண் கொண்ட சிம் கார்டு உங்கள் போனில் இருக்க வேண்டும். அந்த எண்ணுக்கு OTP வரும். அதை எண்டர் செய்தால் போதும். இரண்டாவது WhatsApp கணக்கு ரெடி.
 

click me!