உங்கள் மொபைல் கேளரியில் இருக்கும் புகைப்படத்தை உங்கள் அனுமதி இல்லாமல் மற்றவர்கள் பார்ப்பதை தடுக்க இதை செய்யுங்கள்.
உங்கள் மொபைலில் உள்ள குறிப்பிட்ட சில புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை மறைக்க விரும்புகிறீர்களா ? இதற்காக நீங்கள் எந்த விதமான மூன்றாம் தரப்பு ஆப்பையும் இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இதை செய்தால் போதும்.
1. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள புகைப்படத்தை மறைக்கலாம் :
undefined
இதற்கு உங்கள் மொபைலின் டீஃபால்ட் அப்ளிக்கேஷனான பைல் மேனேஜர் (File Manager ) ஆப் போதுமானது . இதில் நீங்கள் எடுத்த புகைப்படம், வீடியோ, உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஷேர் செய்த புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகிய அனைத்தும் இடம் பெற்று இருக்கும்.
நீங்கள் எடுத்த புகைப்படத்தை மறைக்க உங்கள் மொபைலின் பைல் மேனேஜர் (File Manager) ஆப்பிற்கு செல்லவும். அதில் உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தை லாங் பிரஸ் செய்து தேர்வு செய்து கொள்ளவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பைல் மேனேஜர் ஆப்பில் ஷேர், மூவ், டெலீட், மோர் போன்ற நான்கு ஆப்ஷன்கள் இடம்பெறும்.
இதில் மோர் (More) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். பிறகு அதிலுள்ள ரீநேம் ஆப்ஷனை தேர்வு செய்யவும். உங்கள் புகைப்படம் டாட் ஜேபிஜி (. jpg ) என ஸ்டோர் செய்யப்பட்டு இருக்கும் அதனை டாட் டிஎக்ஸ்டி (. txt ) என மாற்றி பின் ok பட்டனை க்ளிக் செய்யவும்.
இதன் மூலம் நீங்கள் தேர்வு செய்த புகைப்படங்கள் அனைத்தும் டெக்ஸ்ட் ( text ) அதாவது எழுத்து வடிவில் மாறி விடும். இதன் மூலம் உங்கள் ரகசிய புகைப்படங்களை யாரலும் பார்க்க முடியாது.
WhatsApp Auto Reply: அடேங்கப்பா வாட்ஸ்அப்பில் இப்படியெல்லாமா கூட பண்ணலாம்?
இதனை நீங்கள் மீண்டும் பார்க்க விரும்பினால் உங்கள் புகைப்படத்தின் எக்ஸ்டன்ஷனை மீண்டும் டாட் ஜேபிஜி (. jpg ).என மாற்றி பயன்படுத்தலாம்.
2. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள வீடியோவினை மறைக்கலாம் :
இதனை செய்வதற்கு உங்கள் மொபைலில் உள்ள பைல் மேனேஜர் (File Manager) ஆப்பிற்கு செல்லவும். அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவினை லாங் பிரஸ் செய்து தேர்வு செய்து கொள்ளவும்.
என்னது வியர்வையை வைத்து சார்ஜ் பண்ணலாமா ? அட்வான்ஸ் சார்ஜிங் டெக்னிக்
பின் அதிலுள்ள மோர் (More) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். பிறகு அதிலுள்ள ரீநேம் ஆப்ஷனை தேர்வு செய்யவும். உங்கள் வீடியோ டாட் எம்பி 4 (. mp4 ) என ஸ்டோர் செய்யப்பட்டு இருக்கும் அதனை டாட் டிஎக்ஸ்டி (. txt ) அல்லது உங்களுக்கு பிடித்த வேறு ஏதேனும் எக்ஸ்டன்ஷனாக மாற்றி பின் ok பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
இதன் மூலம் நீங்கள் தேர்வு செய்த வீடியோக்கள் அனைத்தும் டெக்ஸ்ட் ( text ) அல்லது நீங்கள் தேர்வு செய்த ஃபார்மேட்டில் மாறி விடும். இதன் மூலம் உங்கள் ரகசிய வீடியோக்ககளை யாரும் பார்க்காத வகையில் நீங்கள் மறைத்து வைத்துக் கொள்ளலாம்.இதனை நீங்கள் மீண்டும் மாற்ற விரும்பினால் உங்கள் வீடியோவின் பழைய எக்ஸ்டன்ஷனான டாட் எம்பி 4 (. mp4 ) என மீண்டும் மாற்றி பயன்படுத்தவும்.