Telegram-ல இவ்ளோ வசதி இருக்கா ? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்

By Dinesh TGFirst Published Oct 17, 2022, 11:04 PM IST
Highlights

Telegram செயலியில் உங்களுக்கே தெரியாத பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றில் நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 4 டிப்ஸ், டிரிக்ஸ்களை இங்கு காணலாம்.

பொதுவாக டெலகிராமை அனைவரும் சேட் செய்வதற்காகவும், வீடியோ கால் செய்வதற்காகவும், புகைப்படங்களை ஷேர் செய்வதற்கும் மட்டுமே  பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் பல அம்சங்கள் குவிந்துள்ளது அவை பின்வருமாறு:

1. தற்காலிகமாக ஒரு மெயில் ஐடி உருவாக்கலாம்

நீங்கள் தற்காலிகமாக   ஒரு மெயில் ஐடியினை பயன்படுத்த விரும்பினால் இதற்கென எந்த ஒரு ஆப்பையும் டவுன்லோட் செய்யத் தேவையில்லை. இதை செய்தால் போதும். இதற்கு உங்கள் மொபைலில் உள்ள  டெலிகிராம் பக்கத்திற்கு செல்லவும். அங்கே டெம்ப்  மெயில் பாட் (TEMPMAILBOT) என்பதை கிளிக் செய்யவும். இதனை பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான மெயில் ஐடியினை உருவாக்கலாம்.

2. ஸ்க்ரீனை ஷேர் செய்யலாம்:

லேப்டாப்பில் வீடியோ காலில் இருக்கும்போது ஸ்க்ரீன் ஷேர் செய்வது பொதுவான ஒன்று. ஆனால் இதை மொபைலிலும் செய்யலாம். உங்கள் மொபைலில் உள்ள டெலிகிராமில் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினருடன் வீடியோ காலிங் செய்து கொண்டிருக்கும்போதே அதிலுள்ள ஷேர் ஸ்க்ரீன் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது ஸ்க்ரீனை ஷேர் செய்யலாம்.

புதிய ஆண்ட்ராய்டு 13 உடன் விரைவில் வெளிவரும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்!

3. பிடித்த பாடலை கண்டுபிடிக்கலாம்:

சில நேரங்களில் குறிப்பிட்ட சில பாடல்கள் உங்கள் மனதில் தோன்றும் ஆனால் அதற்கான வரிகள் சரியாக நினைவில் வராது இதற்காக நீங்கள் பிளே ஸ்டோரில் எந்த ஆப்பையும் டவுன்லோட் செய்யத் தேவையில்லை இதனை செய்தால் போதும். டெலகிராமில் சாங் ஐடி பாட் (Song Id Bot) என்பதை திறந்து உங்களுக்கு வேண்டிய பாடலை கேட்க வைத்தால் நீங்கள் தேடும் பாடல் உங்களுக்கு கிடைக்கும்.

பொது இடங்களில் சார்ஜ் செய்யும் கவனம்! எங்கும் ஹேக்கர்கள், எதிலும் ஆபத்து!

4. வாட்ஸ்அப் மெசேஜ்களை டெலிகிராமுக்கு மாற்றலாம்:

வாட்ஸ்அப்பில் நீங்கள் செய்த அனைத்து சேட்களையும் டெலிகிராமிற்கு எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம். இதற்கு உங்கள் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள மோர் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும் அதில் எக்ஸ்போர்ட் சேட் என்பதை க்ளிக் செய்யவும். பிறகு அதிலுள்ள டெலகிராமை க்ளிக் செய்தால் நீங்கள் செய்த  அனைத்து சேட்களும் டெலகிராமிற்கு எக்ஸ்போர்ட் ஆகிவிடும். இதற்காக எந்த ஒரு ஆப்பையும் இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை.
 

click me!