Google Tricks : தினமும் யூஸ் பண்றோம் ஆனா இது தெரியாம போச்சே ! அட்டகாசமான கூகுள் ட்ரிக்ஸ்

By Dinesh TGFirst Published Oct 12, 2022, 11:16 AM IST
Highlights

பல்வேறு விதங்களில் உபயோகமாக உள்ள கூகுளில் உங்களுக்கே  தெரியாத பல அட்டகாசமான பொழுது போக்கு அம்சங்கள் இதில் உள்ளது. அது குறித்து இங்கு காண்போம்.
 

கூகுள் என்பது தேடுபொறியாக மட்டுமல்லாமல்  ஆன்லைன் விளம்பரம் , கிளவுட் கம்ப்யூட்டிங் , கணினி  மென்பொருள் , குவாண்டம் கம்ப்யூட்டிங் , இ-காமர்ஸ் , செயற்கை நுண்ணறிவு  ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிறுவனமாக செயல்படுகிறது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனம்" என்ற பெயரை பெற்றதோடு, அதற்கு ஏற்ப பயனர்களுக்கான பல்வேறு வசதிகளையும் வழங்கி வருகிறது. மேலும்அமேசான் , ஆப்பிள் , மெட்டா , மற்றும்  மைக்ரோசாப்ட் ஆகியவற்றுடன் இணைந்து ஐந்து அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகப்பெரியதாகக்  கருதப்படுகிறது.

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட கூகுளின் தேடுபொறியில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களும் உள்ளன. அவற்றில் சில:

1. கூகுள் ஸ்பேஸ்

இந்த அட்டகாசமான  ட்ரிக்கை உபயோகிக்க உங்கள் மொபைலில் உள்ள கூகுள் குரோமில் கூகுள் ஸ்பேஸ் என டைப் செய்யவும்.  அதில் https://mrdoob.com/projects/chromeexperiments/google-space/  என்ற லிங்கை க்ளிக் செய்யவும். இதன் மூலம் உங்கள் கூகுள் பக்கத்தில் உள்ள ஆப்ஷன்கள் அனைத்தும் அந்தரத்தில் விண்வெளியில் தொங்கி கொண்டிருப்பது போல் காட்சியை அளிக்கும்.

2. கூகுள் அண்டர்கிரவுண்ட்

இதற்கு முதலில் உங்கள் கூகுள் குரோமில் கூகுள் இன் அண்டர்கிரவுண்ட் என சர்ச் செய்யவும் . பிறகு  https://elgoog.im/underwater/  என்ற வெப்சைட்டை க்ளிக் செய்யவும். இதனை க்ளிக் செய்த உடன்  உங்கள் கூகுள் பேஜானது தண்ணீருக்குள் இருப்பது போன்ற சுவாரஸ்யமான காட்சியை அளிக்கும். இது உங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும்.

Tech Tips : இது தெரியாம போச்சே.. இனி காசு கொடுத்து சாப்ட்வேர் வாங்க வேண்டாம்!

3. கூகுள் ஸ்கை

வானத்தில் உள்ள நட்சத்திரத்தை துல்லியமாக டெலஸ்க்கோப் உதவியில்லாமல் உங்கள் சாதாரண கண்களால் காண முடியாது. ஆனால் இந்த ட்ரிக்கை பயன்படுத்தினால் உங்கள் ஸ்மார்ட் போனிலேயே சுலபமான முறையில் அழகான சூரிய குடும்பத்தை உங்களால் காண முடியும். இதற்கு நீங்கள் உங்கள் கூகுள் குரோமில் கூகுள் ஸ்கை என டைப் செய்யவும். அதில் https://www.google.com/sky/  என்ற வெப்சைட்டை கிளிக் செய்யவும். இதன் மூலம் சூரிய குடும்பதை நேரில் காண்பது போன்ற உணர்வை நீங்கள் பெறுவீர்கள்.

இதை போல பல அட்டகாசமான பொழுது போக்கு அம்சங்கள் உங்களுக்கே தெரியாமல் நீங்கள் தினமும் உபயோகிக்கும் செயலியான கூகுளிலேயே உள்ளது. அதனை பயன்படுத்தி அறிவியலை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

click me!