WhatsApp-ல் முக்கிய மெசேஜ்களை ஹைலைட் செய்வது எப்படி?

By Dinesh TGFirst Published Oct 11, 2022, 4:03 PM IST
Highlights

வாட்ஸ்அப் செயலியில் அழகழகான  எழுத்துக்களில் மெசேஜ் செய்வது எப்படி என்பது குறித்து இங்கே காணலாம். மேலும், வாட்ஸ்அப்பில் வண்ணமயமானஃபாண்ட் வகைகள் வரவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
 

வாட்ஸ்அப் செயலி சேட்டிங் செய்வதற்கு மட்டுமல்லாமல் பல்வேறு வகையில் அனைவருக்கும் உதவிகரமாக உள்ளது. வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் செய்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. தற்போது வீடியோ காலிங் செய்வதற்கென்றே பிரத்யேக அம்சத்தை அந்நிறுவனம் வழங்கி உள்ளது.
 இதன் மூலம் நீங்கள் 32 நபர் வரையில் விடியோ கான்ஃபரன்ஸில் இணைத்துக்கொள்ளலாம். மேலம், வாட்ஸ்அப் பேமெண்ட் இருப்பதால், நினைத்த நபருக்கு, நினைத்த நேரத்தில் பணம் அனுப்பலாம். இப்படி பல்வேறு வசதிகளோடு மேலும் புதிய அம்சங்கள் வரவுள்ளன. அவற்றில் ஒன்று வாட்ஸ்அப் ஃபாண்ட் ஆகும்.

டெலிகிராம் செயலியைப் போல், வாட்ஸ்அப் தளத்திலும், விதவிதமா எழுத்துரு வகைகள் கொண்டு வரப்படலாம் என்று தகவல்கள் வந்துள்ளன. அதன்படி, மெசேஜில் உள்ள எழுத்தின் அளவு, எழுத்தின் நிறம் ஆகியவற்றை பயனரே தேர்ந்தெடுக்கும் வகையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த எழுத்து மாற்றி அம்சங்கள் விரைவில் பரிசீலிக்கப்பட்டு, பீட்டா வெர்ஷனில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக வாட்ஸ்அப்பில் Bold, Italic, Underscore உள்ளிட்ட எழுத்து நிலைகள் கொண்டு வரப்பட்டன. அதாவது,  நீங்கள் மெசேஜ் செய்யும்போது அந்த மெசேஜ் அழகான எழுத்து வடிவத்தில் இருப்பதற்காக எந்த விதமான ஆப்பையும் இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை.

இதற்கு உங்கள் வாட்ஸ்அப் செயலியிலேயே அதனை பயன்படுத்தி உங்கள் ஃபாண்டை நீங்கள் சுலபமாக மாற்றிக் கொள்ளலாம்.

WhatsApp பயன்படுத்த வேண்டாம்! Telegram நிறுவனர் கடும் எச்சரிக்கை

போல்ட் மெசேஜ்: Bold Text

முதலில் உங்கள் வாட்ஸ் அப் செயலியில் நீங்கள் யாருக்கு மெசேஜ் செய்ய விரும்புகிறீர்களோ அவர்களுடைய சேட்டிங் பகுதிக்கு செலவும். அதில் ஆஸ்டெரிஸ்க் எனப்படும்  * குறியினை டைப் செய்து பிறகு நீங்கள் அனுப்ப வேண்டிய மெசேஜை டைப் செய்யவும்.  பின் (ஆஸ்டெரிஸ்க்)  * குறியினை டைப் செய்யவும் இவ்வாறு செய்யும்போது நீங்கள் டைப் செய்த மெசேஜ் போல்டாக மாறிவிடும்.

இத்தாலிக் எழுத்து: Italic Text

இதை போல உங்களது மெசேஜை இட்டாலிக் ஃபாண்டில் மாற்றுவதற்கு (அண்டர் ஸ்கோர்) _  குறியினை டைப் செய்து பிறகு நீங்கள் அனுப்ப வேண்டிய மெசேஜை டைப் செய்து பின் (அண்டர் ஸ்கோர் )  _  குறியினை டைப் செய்யவும். இவ்வாறு செய்யும்போது நீங்கள் டைப் செய்த மெசேஜ் இட்டாலிக் ஸ்டைலில் மாறிவிடும்.

WhatsApp Update: இனி நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்!!

மோனோஸ்பேசஸ் (MonoSpace):

மோனோஸ்பேசஸ் ஃபாண்டில் உங்கள் மெசேஜை மாற்ற விரும்பினால் (டில்டு) ~ குறியினை டைப் செய்து, நீங்கள் அனுப்ப வேண்டிய மெசேஜை டைப் செய்து பின் (டில்டு)  ~  குறியினை டைப் செய்யவும். இவ்வாறு செய்யும்போது நீங்கள் டைப் செய்த மெசேஜ் மோனோஸ்பேசஸ் அழகாக மாறி இருக்கும்.
இந்த அம்சத்தைப் பயன்படுத்தி முக்கியமான மெசேஜ், செய்திகளை வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்.
 

click me!