எந்த Apps-ம் இல்லாமலே ஒரே நொடியில் வீடியோவை, ஆடியோவாக மாற்றலாம்!

By Dinesh TGFirst Published Oct 10, 2022, 10:43 PM IST
Highlights

வீடியோ ஃபைலை ஆடியோ ஃபைலாக மாற்ற எந்த விதமான செயலியையும் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை. அதற்கு இந்த ட்ரிக்கை பயன்படுத்தினாலே போதும்.

வழக்கமாக ஒரு ஃபைலை மாற்றுவதற்கு பிளே ஸ்டோரில் சென்று எதாவது ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்வோம். அவ்வாறு செய்யும்போது உங்களுக்கு நேரமும் வீணாகும் , கூடுதல் செயலிகளால் உங்கள் போனின் ஸ்டோரேஜும் அதிகரிக்கும். இனி அவ்வாறு செய்ய வேண்டாம். 

பொதுவாக உங்கள் அனைத்து ஃபைல்களும் , வீடியோ, ஆடியோ அல்லது உங்கள் புகைப்படம் போன்ற எல்லா ஃபைல்களும் உங்கள் போனின் ஃபைல் மேனேஜர் அல்லது ஃபைல்ஸ் பகுதியில் தான் ஸ்டோர் செய்யப்படும். அதிலுள்ள எக்ஸ்டன்ஷனை மாற்றினாலே உங்கள் வேலை சுலபமாக முடிந்துவிடும்.
 ஒரு வீடியோ ஃபைலை ஆடியோ ஃபைலாக மாற்ற உங்கள் மொபைலின் ஃபைல்ஸ் அல்லது ஃபைல் மேனேஜர் பகுதிக்கு செல்லவும். அதில் நீங்கள் எந்த வீடியோ ஃபைலை ஆடியோவாக மாற்ற விரும்புகிறீர்களோ அதனை லாங் பிரஸ் செய்து தேர்வு செய்யுங்கள்.

5G இருந்தும் பிரயோஜனம் இல்லை.. குமுறும் iPhone வாடிக்கையாளர்கள்.. Airtel விளக்கம்!

லாங் பிரெஸ் செய்த உடன் Share, Move, Delete, More என ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்ப பொதுவாக 4 விதமான ஆப்ஷன்களைக் காட்டும். அதில் More என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யுங்கள். பிறகு அதில் Rename என்பதை க்ளிக் செய்து அந்த ஃபைலின் எக்ஸ்டன்ஷனை மாற்றுங்கள். உங்களுடைய வீடியோ ஃபைலானது, பெயரின் கடைசியில் டாட் mp4 (.mp4) என ஸ்டோர் செய்யப்பட்டு இருக்கும். அதனை டாட் mp3(.mp3) என்ற எக்ஸ்டன்ஷனிற்கு மாற்றவும். அவ்வளவு தான். இப்போது உங்களுடைய வீடியோ ஃபைல் ஆடியோவாக சுலபமாக மாறிவிடும். நீங்கள் அதை கிளிக் செய்தால், ஆடியோவாக ப்ளே ஆகும்.
இதற்காக நீங்கள் எந்த விதமான ஆப்பையும் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை. உங்கள் மொபைலில் உள்ள ஃபைல் மேனேஜரில் இந்த ஒரு ஆப்ஷனை செய்தாலே போதுமானது. 

WhatsApp பயன்படுத்த வேண்டாம்! Telegram நிறுவனர் கடும் எச்சரிக்கை

மேலும், பெயர் தெரியாத ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்தால், அது உங்கள் ஸ்மார்ட்போனிற்குள் வைரஸ்கள், ஸ்பைவேர்கள் மற்றும் மால்வேர்களை அந்த ஆப்கள் கொண்டு வரலாம். அதன் பிறகு உங்களின் தனிப்பட்ட தகவல், பாஸ்வேர்ட்கள் மற்றும் வங்கி விவரங்கள் என எதற்குமே பாதுகாப்பு இருக்காது. எனவே, முடிந்த வரையில் தேவையற்ற ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்வதைத் தவிர்ப்பது நலம்.

click me!