பொதுவாக சிலருக்கு இரவு நேரங்களில் தங்களுக்கு பிடித்தவர்களுடனோ, அல்லது நண்பர்களுடனோ சேட்டிங் செய்யும் பழக்கம் உள்ளது. இவர்களுக்கான ஒரு சூப்பர் டிப்.
இரவு நேரங்களில் சேட் செய்யும்போது எவ்வளவுதான் பிரைட்னஸை குறைத்தாலும் அதில் இருந்து வரும் வெளிச்சம் நம் கண்களைப் பாதிக்கும்.. டார்க் மோடில் மொபைலை பயன்படுத்தினாலும் கூட இதில் இருந்து வரக்கூடிய வெளிச்சம் சற்று அதிகமாகவே இருக்கும்.இந்த வெளிச்சத்தை இன்னும் குறைக்க நீங்கள் பயன்படுத்தும் அண்ட்ராய்டு போனில் ஒரு எளிதான வழி இருக்கிறது.
சென்னையில் Airtel 5G வந்துவிட்டது.. அடப்பாவிகளா இவ்வளவு தான் உங்கள் வேகமா?
இதற்கு நீங்கள் எந்த விதமான ஆப்களையும் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை. இந்த ட்ரிக்கை மட்டும் பயன்படுத்தினாலே போதும்.
இதற்கு முதலில் உங்கள் மொபைலின் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும். பிறகு அதில் ஆக்சசிபிலிட்டியை தேர்வு செய்யவும். அதில் எக்ஸ்ட்ரா டிம் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் மொபைலில் இருந்து வரும் வெளிச்சத்தின் அளவு குறையும்.
இதனால் நீங்கள் உங்கள் மொபைலினை மிகவும் குறைவான வெளிச்சத்தில் உபயோகித்துக் கொள்ளலாம்.மேலும், குறைந்த வெளிச்சத்தில் உங்கள் ஃபோன் திரையைப் பயன்படுத்துவதற்கு வசதியாக இருப்பது மட்டுமன்றி, இது உங்கள் பேட்டரி ஆயுளைப் பாதுகாக்கவும் கண்ணைக் கூசும் ஒளியினைக் குறைக்கவும் உதவும்.
இனி 4K வீடியோ பாக்கனும்னா காசு கொடுக்கனும்! Youtube அட்டகாசம்
அதிக வெளிச்சத்தில் மொபைலை பயன்படுத்தினால் உங்கள் கண்களுக்கு பாதிப்பு உண்டாக்குவது மட்டுமன்றி சில சமயங்களில் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. இதனால் சிறு வயதிலேயே கண்ணாடி அணியும் நிலை ஏற்படுகின்றது.
மேலும், அதிக வெளிச்சத்தில் சேட் செய்யும்போது உங்கள் முகத்தில் தோன்றும் வெளிச்சத்தினால் உங்கள் அருகில் இருப்பவருக்கும் தொந்தரவாக இருக்கும். இந்த ட்ரிக்கை பயன்படுத்தினால் யாருக்கும் தொந்தரவு இல்லாமலும் உங்கள் கண்களுக்கும் எந்த ஒரு பாதிப்புமின்றி உங்களுக்கு பிடித்தவர்களுடன் நீங்கள் நிம்மதியாக சேட் செய்யலாம்.