உங்களுக்கு புடிச்ச ஆப்ஸை ரகசியமா பயன்படுத்தனுமா ? இதை ட்ரை பண்ணுங்க

By Dinesh TG  |  First Published Oct 20, 2022, 11:25 PM IST

யாருக்கும் தெரியாமல் உங்கள் போனில் சில ஆப்களை  நீங்கள் ரகசியமாக பயன்படுத்த விரும்புகிறீர்களா உங்களுக்கான ஒரு அட்டகாசமான ட்ரிக் 


பொதுவாக அனைவரும் தங்கள்  மொபைலை அடுத்தவர்கள் பயன்படுத்தி விடக்கூடாது  என்பதற்காக பல்வேறு பாஸ்வேர்டுகள், ஃபேஸ் லாக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் போன்றவற்றை பயன்படுத்துவார்கள்.

சிலர் குறிப்பிட்ட ஆப்களுக்கு பாஸ்வேர்டு போடுவது உண்டு.  உங்கள் மொபைலில் அந்த குறிப்பிட்ட ஆப் இருப்பது யாருக்கும் தெரியாமல் இருக்கவேண்டும் என்று நினைத்தால் இதை செய்யுங்கள். உங்கள்  மொபைல் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும்.  அதிலுள்ள சர்ச் பாக்சில் ஹைடு (hide) என டைப் செய்யவும். அதில் ஹைடு ஆப்ஸ்  என்பதை தேர்வு செய்யவும். நீங்கள் எந்த ஆப்பை மறைக்க விரும்புகிறீர்களோ அதை க்ளிக் செய்து கொள்ளவும். பிறகு உங்கள் ஹோம் ஸ்கிரீனில் அந்த அப்ளிகேஷன்  இருப்பது யாராலும் பார்க்க முடியாது.  

Tap to resize

Latest Videos

undefined

இதை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் உங்கள் ஹோம் ஸ்கிரீனை  ஜூம் (zoom) செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை நீங்கள் பாஸ்வேர்டு போட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு ஆப் லாக் என்பதை தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான பாஸ்வேர்டு அல்லது பின்னை பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.

தீபாவளிக்கான அட்டகாசமான Diwali WhatsApp Status 2022

மேலும் இந்த அப்ளிகேஷன்களிலிருந்து நோட்டிபிகேஷன் வருவதையும் உங்களால்  தடுக்க முடியும். இதற்கு உங்கள் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள ஹைடு நோட்டிபிகேஷன் என்பதை க்ளிக் செய்தால் உங்கள் வேலை சுலபமாக முடிந்தது. இதை பயன்படுத்தி எத்தனை ஆப்களை வேண்டுமானாலும் நீங்கள் மறைத்துக் கொள்ளலாம்.  

நீங்கள் இதனை அன்ஹைடு (unhide) செய்ய விரும்பினால் அதே செட்டிங்ஸ் பகுதியில் சர்ச் பாக்சில் ஹைடு (hide) என டைப் செய்யவும். பின் நீங்கள் மறைத்த ஆப்களின் பட்டியல் தோன்றும். அதில் உங்களுக்கு விருப்பமான ஆப்களை அன்ஹைடு (unhide) செய்து கொள்ளவும்.
இதற்காக எந்த ஒரு ஆப்பையும் நீங்கள்  இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இந்த செட்டிங்ஸை செய்தால் போதும்.
 

click me!