ஜியோவின் அடுத்த அதிரடி.. வந்துவிட்டது JioGamesCloud.. ஆன்லைனில் இலவசமாக விளையாடலாம்!

Published : Nov 30, 2022, 01:58 PM IST
ஜியோவின் அடுத்த அதிரடி.. வந்துவிட்டது JioGamesCloud.. ஆன்லைனில் இலவசமாக விளையாடலாம்!

சுருக்கம்

ஜியோ கேம்ஸ் கிளவுட் என்ற பெயரில், பீட்டா பதிப்பில் ஆன்லைன் கேமிங் அம்சத்தை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எப்படி பதிவு செய்ய வேண்டும், எப்படி விளையாட வேண்டும் னெ்பது குறித்து இங்கு காணலாம்.

ரிலையன்ஸ் ஜியோ தனது புதிய கிளவுட் கேமிங் தளமான ஜியோ கேம்ஸ் கிளவுட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய கேமிங் இயங்குதளத்தில் AAA Titles முதல் Hyper Casual கேம்ஸ் வரை என பலதரப்பட்ட கேம்கள் உள்ளன. ஜியோ கேம்களை பொறத்தவரையில், அதை இன்ஸ்டால் செய்ய தேவையில்லை, பதிவிறக்கம் செய்ய தேவையில்லை, அப்டேட் செய்ய தேவையில்லை. வெறும் இன்டெர்நெட் இருந்தால் மட்டும் போதும். இன்டர்நெட் மூலமாகவே ஜியோ கேம்ஸ் கிளவுட்டில் லாகின் செய்து, ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்து விளையாடலாம்.

இதுகுறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஏற்கெனவே கடந்த 2019 ஆம் ஆண்டு வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (ஏஜிஎம்) கிளவுட் கேமிங் குறித்து பேசினார். அப்போது ஜியோ கேமிங் தளம் பற்றி சில திட்டங்களை முன்வைத்தார். அந்தத் தளம் இப்போது தயாராக உள்ளது. ஸ்மார்ட்போன்கள், பிரவுசர்கள், மற்றும் ஜியோ செட் ஆகியவற்றில் ஜியோ கேம்ஸ்  பீட்டா பயன்படுத்துவதற்கு தயாராக உள்ளது.

மிகக்குறைந்த விலையில் 6.51 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரியுடன் Vivo Y02 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

அதன்படி, பயனர்கள் இந்த புதிய கேமிங் தளத்தை ஸ்மார்ட்போன்கள், இணைய உலாவிகள் மற்றும் ஜியோ செட் டாப் பாக்ஸ் வழியாக அணுக முடியும். இந்தத் தளத்தில் உள்ள லைப்ரரயில் சுமார் 50 க்கும் மேற்பட்ட இலவசமான HD கேம்கள் உள்ளன. குறிப்பாக செயின்ட்ஸ் ரோ: தி தர்ட், செயின்ட்ஸ் ரோ IV, கிங்டம் கம் டெலிவரன்ஸ், பிஹோல்டர், டெலிவர் அஸ் தி மூன், ஃப்ளாஷ்பேக், ஷேடோ டாக்டிக்ஸ்: பிளேட்ஸ் ஆஃப் தி ஷோகன் (கண்ட்ரோலர்- மட்டும்), ஸ்டீல் எலிகள், விக்டர் வ்ரான், பிளாக்சாட்: அண்டர் தி ஸ்கின் மற்றும் கார்பீல்ட் கார்ட் ஃபியூரியஸ் ரேசிங் என பல்வேறு கேம்கள் உள்ளன.

இதற்கிடையில், ஜியோவின் பீட்டா திட்டத்தில் சேருவதற்கு பயனர்கள் விண்ணப்பிக்கலாம். அனைத்து பயனர்களிடமிருந்தும் பீட்டா பதிப்பிற்கான விண்ணப்பத்தை ஜியோ வரவேற்கிறது. எனவே, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா அல்லது வேறு நெட்வொர்க்கில் நீங்கள் இருந்தாலும், ஜியோ கேமிங் பிளாட்ஃபார்மில் சேரலாம்.

JioGamesCloud இல் சேருவதற்கு https://cloud.jiogames.com/ என்ற தளத்திற்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். அல்லது உங்கள் Android ஸ்மார்ட்போன்/டேப்லெட்டில் JioGames: Play, Win, Stream செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 
 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

அமேசான் பிரைம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! இனி இதையும் இலவசமாக பார்க்கலாம் - சத்தமில்லாமல் வந்த புது அப்டேட்!
Washing Machine: வாஷிங் மெஷினை சுவற்றை ஒட்டி வைப்பரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து நிச்சயம் - உஷார்!