டேட்டா பிரியர்களுக்காக ஜியோவில் கொண்டு வரப்பட்டுள்ள அட்டகாசமான ரீசார்ஜ் பிளான்!

By Dinesh TGFirst Published Dec 8, 2022, 10:22 AM IST
Highlights

ஜியோ நிறுவனம் 222 ரூபாய் மதிப்புள்ள புதிய டேட்டா ரீசார்ஜ் பிளானை கொண்டு வந்துள்ளது. இதில் எந்தவிதமான பலன்கள் உள்ளன என்பது குறித்து முழுமையாக இங்குக் காணலாம்.

தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டேட்டா பிளான்களை மாற்றி வருகின்றன. அந்த வகையில், ஜியோ நிறுவனம் 222 ரூபாய்க்கு ஒரு பிளானை கொண்டு வந்துள்ளது. இது முழுக்க முழுக்க டேட்டா மட்டுமே வழங்கக்கூடிய பிளான் ஆகும். அதாவது, கூடுதலாக டேட்டா வேண்டும் என்று விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஏற்றது. வழக்கமான வாய்ஸ்கால் வேண்டுமென்றால், அதற்கு பிற பிளான்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 

ரூ.222 பிளானில் என்ன பலன்கள்?

ஜியோ வாடிக்கையாளர்கள் 222 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 56 ஜிபி டேட்டா பெறலாம். இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். வழக்கமாக ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணம் 15 ரூபாய், இரண்டு ஜிபி டேட்டாவின் கட்டணம் 25 ரூபாய் இருக்கும். ஆனால், 222 ரூபாய்க்கு 56 ஜிபி வழங்கப்படுவது என்பது ஓரளவு நல்ல பிளான் தான். 

ஏனெனில், 222 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது 56 ஜிபி கிடைக்கிறது. அப்படி எனில், ஒரு ஜிபி டேட்டாவின் விலை வெறும் 4.4 ரூபாய் மட்டுமே வருகிறது. இதை வைத்து பார்க்கும் போது, 56 ஜிபி டேட்டா என்பது தாராளம். இந்த டேட்டா ரீசார்ஜ் திட்டமானது, உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.  இருப்பினும், கால்பந்து போட்டி முடிந்த பிறகும், இத்திட்டம் அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

அட.. இவ்வளவு ஈஸியா Paytm வாலட்டிலிருந்து வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றலாமா!

ஜியோவின் ரூ. 222 ரூபாய் தவிர, வாய்ஸ்கால் வசதியுடன் நல்ல ரீசார்ஜ் பிளான் வேண்டும் என்று விரும்புகிறவர்கள் 299 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டத்தை பார்க்கலாம். இத்திட்டத்தில் 28 நாட்களுக்கு 2ஜிபி வரையிலான 4ஜி டேட்டா வழங்குகிறது, இது மற்ற ஏர்டெல் நெட்வொர்க் வழங்குவதை விட 512எம்பி அதிகம். ஏர்டெல் திட்டத்தைப் போலவே, ஜியோவிலும், நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் இலவச அன்லிமிடேட் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதிகளுடன் வழங்கப்படுகிறது.
 

click me!