200 மெகாபிக்சல் கேமராவுடன் விரைவில் களமிறங்கும் Redmi Note 12 Series!

By Dinesh TG  |  First Published Dec 8, 2022, 6:14 PM IST

புதிய Redmi Redmi Note 12 Series 5G ஸ்மார்ட்போன்கள் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இந்த எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்களை கருத்தில் கொள்ளலாம்.
 


ஒவ்வொரு ஆண்டும் ரெட்மி தரப்பில் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி வருகின்றன. இந்த 2022 ஆண்டில் ரெட்மி 11 சீரிஸ் நல்ல விற்பனையானது. அதைத் தொடர்ந்து தற்போது ரெட்மி 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளது.  

இந்த புதிய ரெட்மி நோட் 12 போன்கள் சமீபத்தில் சீனாவில் ரூ.13,600 என்ற ஆரம்ப விலையில் அறிவிக்கப்பட்டன. மொத்தம் மூன்று மாடல்கள் வெளியிடப்பட்டன - Redmi Note 12, Redmi Note 12 Pro மற்றும் Redmi Note 12 Pro+.

Tap to resize

Latest Videos

undefined

இப்போது இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தைக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிராண்ட் அனைத்து வகைகளையும் இந்தியாவிற்கு கொண்டு வருமா என்பது தெரியவில்லை. ரெட்மி இந்தியா நிறுவனத்திடம் இருந்து  இன்னும் அறிமுக தேதி குறித்து எந்த செய்திகளும் இல்லை.  ப்ரோ+ மாடல் 200 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Redmi Note 12: என்ன எதிர்பார்க்கலாம்?

இந்திய வகைகளின் அம்சங்கள் சீன மாடல்களைப் போலவே இருக்கும். எனவே, ரெட்மி நோட் 12 மாடல் 6.67-இன்ச் FullHD, 120 Hz ரெப்ரெஷ் ரேட் உள்ளது. ஆனால், பழைய Android 12 OS மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Qualcomm Snapdragon 4 Gen 1 பிராசசர் இருக்கலாம். பின்புறத்தில் டூயல் கேமரா,. முன்பக்கத்தில் செல்ஃபிக்களுக்கான 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. 33W சார்ஜிங் தொழில்நுட்பத்துடுன், 5,000mAh பேட்டரி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Redmi Note 12 5G விரைவில் இந்தியாவில் அறிமுகம்! அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியீடு!!

Redmi Note 12 Pro+: எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

  • டிஸ்ப்ளே பொறுத்தவரையில் ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனில் என்ன இருக்கிறதோ, அதையே தான் 12 ப்ரோ பிளஸ் போனிலும் எதிர்பார்க்கலாம்.
  • 120Hz ரெப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங்,
  • 6.67-இன்ச் Full-HD OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
  • இது மீடியாடெக் டைமன்சிட்டி 1080 SoC பிராசருடன் வருகிறது.
  • பின்புறத்தில் 200 மெகாபிக்சல், OIS சென்சாருடன் கூடிய பிரைமரி கேமரா உள்ளது.
  • மேலும், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் சென்சாருடன் கூடிய செல்ஃபி கேமரா உள்ளது.
  • 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 5,000mAh பேட்டரி எதிர்பார்க்கப்படுகிறது.
     
click me!