
ரியல்மி நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு Realme 10 ஸ்மார்ட்போனை டீஸ் செய்தது. அதன்படி, தற்போது இந்த ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.4-இன்ச் FHD+ 90Hz Super AMOLED திரை, 8GB வரையிலான ரேம், Helio G99 SoC பிராசசர், Android 12 ஆகிய அம்சங்கள் உள்ளன.
கேமராவைப் பொறுத்தவரையில், ரியல்மி 10 ஸ்மார்ட்போனில் 2MP போர்ட்ரெய்ட் கேமரா, 50MP பிரைமரி கேமரா, முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா ஆகியவை உள்ளன. ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில் விரல்ரேகை ஸ்கேனர் உள்ளது. 33W SuperVOOC ஸ்பீடு சார்ஜிங் வசதியும், அதற்கு ஏற்ப 5000mAh சக்தி கொண்ட பேட்டரியும் உள்ளது.
ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ள ஸ்மார்ட்போனின் தோற்ற படங்களைப் பார்க்கும் போது, ஸ்டைலிஷான லூக்கில், விண் நட்சத்திரங்கள் மோதிய துகள்கள் போன்ற ஒளிக்கீற்று தோற்றத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
Realme 10 விலை:
க்ளாஷ் ஒயிட் மற்றும் ரஷ் பிளாக் என இரண்டு நிறங்களில் Realme 10 இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 4GB + 128GB வேரியண்டானது இந்திய மதிப்பில் சுமார் 14,550 ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 8GB + 128GB வேரியண்டின் விலை 16,630 ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை சுமார் ரூ. 21,060க்கு விற்பனைக்கு வருகிறது. முன்கூட்டிய ஆர்டர்களுக்கு ரியல்மி கோப்பிள் புளூடூத் ஸ்பீக்கர் இலவசம் என்று தகவல்கள் வந்துள்ளன.
ரூ.50 ஆயிரத்திற்குள் iPhone 13 வாங்கலாம்.. எப்படி? இப்படி..
Realme 10 சிறப்பம்சங்கள்: