ஸ்டைலான டிசைனில் விரைவில் அறிமுகமாகும் OPPO Reno 9 Pro+ ஸ்மார்ட்போன்!

By Dinesh TG  |  First Published Nov 5, 2022, 11:52 AM IST

ஒப்போ நிறுவனம் விரைவில் OPPO Reno 9 Pro+ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.


ஒப்போ நிறுவனம் கடந்தாண்டு ரெரேனா 8 ப்ரோ ப்ளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது புதிதாக ரெனோ 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சீரிஸில் ரெனோ 9, ரெனோ 9 ப்ரோ மற்றும் ரெனோ 9 ப்ரோ ப்ளஸ் 5ஜி ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் வருகின்றன.

இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது. அதன்படி, ஒப்போ ரெனோ ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனில் 2412 x 1080 பிக்சல் அளவிலான துல்லியத்துடன் 6.7 இன்ச் OLED டிஸ்பிளே இருக்கலாம் என்றும், ஸ்னாப்டிராகன் 8 ப்ளஸ் ஜென் 1 (Snapdragon 8+ Gen 1) பிராசசர் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

undefined

மேலும், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி,  47000 mAh பேட்டரி ஆகிய அம்சங்கள் இருக்கலாம். பின்புறத்தில் இருக்கும் பேனல் கண்ணாடியா அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்படுமா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. 

மீண்டும் புத்துயிர் பெறும் லாவா நிறுவனம்.. விரைவில் Lava Blaze 5G அறிமுகம்!

கேமராவைப் பொறுத்தவரையில், பின்பக்கத்தில் ட்ரிபிள் கேமரா இருக்கலாம் என்றும், அதில் பிரைமரி கேமராவில் சோனி சென்சாருடன் 50 மெகா பிக்சல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முன்பக்கத்தில் 32 MP செல்ஃபி கேமரா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஒப்போ நிறுவனம் 240W மின்சக்தி கொண்ட சூப்பர் சார்ஜிங் ஸ்மார்ட்போனை தயாரித்து வருவதாகவும், அது 2024 ஆம் ஆண்டு அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகிறது. 240W மின்சக்தி என்பது அசாதாரணமான தயாரிப்பாகும். இதன்மூலம் வெறும் 9 நிமிடத்தில் ஸ்மார்ட்போனில் முழு சார்ஜ் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!