ஷாவ்மியின் ரெட்மி நிறுவனம் நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட் போனை சீனாவில் நேற்று அறிமுகம் செய்து உள்ளது.
ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஆனது ரெட்மி நோட் 12 மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோவிற்கு அடுத்தபடியாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஆனது 5ஜி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும் இது 200 MP முன் புற கேமராவுடன் வெளியாகும் முதல் ரெட்மி ஸ்மார்ட் போன் ஆகும். இதற்கு முன்பு வெளியான ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் இல்லாத பல அம்சங்கள் இதில் உள்ளன அவற்றை இங்கே காண்போம்.
சிறப்பம்சங்கள் :
ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஆனது ரெட்மியின் மற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் மிக ஸ்டைலான தோற்றத்தை அளிக்கிறது. அனைவரையும் கவரும் வகையில் இதன் பின் புற கேமரா வடிவமைக்கப்பட்டு உள்ளது. 8.98mm அளவில், 208 கிராமுடன் சற்று கனமாகவே உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 6.67 இன்ச் OLED பேனல், 120 Hz ரெஃபிரஷ் ரேட் (refresh rate ) மற்றும் 240 Hz டச் சேம்ப்ளிங் ரேட் ( touch sampling rate ) ஆகியவை உள்ளன.
மேலும் இது பிங்கர் பிரிண்ட் சென்சாருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி நோட் ப்ரோ 12 ப்ளஸ் ஆனது மீடியா டெக் டைமன்சிட்டி 1080 ப்ராசஸருடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனில் அப்படி என்ன தான் இருக்கு? எதுக்கு இவ்வளவு விளம்பரம்?
ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ் 5ஜி யில் உள்ள 920 டைமன்சிட்டியை ஒப்பிடும்போது ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் வேகமான செயல் திறனைக் கொண்டுள்ளது. கேமிங் பெர்ஃபார்மன்ஸை அதிகரிக்கும் வகையில் 3000 mm2 வேப்பர் கூலிங் சேம்பர் வழங்கப்பட்டுள்ளது..
இது 120 W சார்ஜிங் வசதியுடன், 5000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஆனது 12ஜிபி ரேம் ரூ.25,000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் வெளியாகலாம் என எதிர் பார்க்கப்படுகிறது .