ரூ.9 ஆயிரம் பட்ஜெட்டில் Moto E22S அறிமுகம்!

By Dinesh TGFirst Published Oct 17, 2022, 11:01 PM IST
Highlights

மோட்டோரோலா நிறுவனம் 9 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் Moto E22S என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதிலுள்ள சிறப்பம்சங்கள், கேமரா நுட்பங்கள் குறித்த முழுமையான விவரங்களை இங்குக் காணலாம்.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் விலைக்கு ஏற்ப நிறைந்த தரத்துடன் கூடிய ஸ்மார்டபோனை அறிமுகம் செய்யும் நிறுவனம் மோட்டோரோலா ஆகும். அந்த வகையில், தற்போது பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்காக குறைந்த விலையில் Moto E22S ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது. 

வெறும் 10 ஆயிரம் ரூபாய் ஸ்மார்ட்போனிலும், நீரிலிருந்து பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்டுள்ளது.இதில் 5,000mAh பேட்டரி, 90Hz டிஸ்ப்ளே, டூயல் கேமரா அமைப்பு, இன்னும் பல அம்சங்கள் உள்ளன. 4ஜிபி ரேம் + 64 ஜிபி உடன் கூடிய இந்த புதிய மோட்டோ E22S இன் ஆரம்ப விலை ரூ.8,999 ஆக உள்ளது.
இது ஈக்கோ ப்ளாக் மற்றும் ஆர்டிக் ப்ளூ ஆகிய இரு வண்ணங்களில், அக்டோபர் 22 அன்று பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. மேலும், குறிப்பிட்ட அளவில் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வருகிறது.

Flipkart Diwali Sale ஆஃபர்களை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!

சிறப்பம்சங்கள்: 

மோட்டோ E22s ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி திரையுடன் 500 நிட்ஸ் பிரைட்னஸ், பாண்டா கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. HD+ மற்றும் வைட்வைன் L1 சான்றிதழ் கொண்டுள்ளது. 90Hz ரெவ்ரெஷ் ரேட் உடன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 
இது IP52 வாட்டர் ப்ரூப் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் லேசான மழை மற்றும் நீர்த் துளிகள்பட்டாலும் பாதிக்காது. மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே இதிலும் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பு உள்ளது.
வலதுபக்கத்தில் கைரேகை சென்சார், முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளன. 5,000mAh சக்தியுடன் கூடிய பேட்டரி, அதற்கு ஏற்ப 10W சார்ஜர் உள்ளன. சார்ஜ் செய்வதற்கு அதிக நேரம் எடுத்தாலும், 5000mAh பேட்டரி உள்ளதால் இரண்டு நாட்கள் வரையில் சார்ஜ் நீடித்து உழைக்கும்.

click me!