அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போனை ரூ. 15,000 பட்ஜெட்டிற்குள் வாங்க ஆசைப்படுகிறீர்களா ? உங்களுக்கான பட்டியல்

By Dinesh TG  |  First Published Oct 12, 2022, 4:28 PM IST

இந்தியாவில் தற்போது 5ஜி அமலுக்கு வந்துள்ள நிலையில், பட்ஜெட் விலையில், குறிப்பாக 15 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கு காணலாம்.
 


இந்தியாவில் சென்னை உட்பட டெல்லி , மும்பை, ஹைதராபாத் , பெங்களூர் , சிலிகுரி, வாரணாசி நாக்பூர் என எட்டு நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் நாடு முழுவதுமுள்ள முக்கிய நகரங்களில் 5ஜி சேவை அமலுக்கு வரும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அந்த வகையில், 5ஜி ஸ்மார்ட்போன் பிரியர்களுக்காக ரூ.15,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட்போன்களின் பட்டியல்:

Latest Videos

undefined

1. ரெட்மி நோட் 11டி 5ஜி (REDMI NOTE 11T 5G): 
இந்த மொபைல் 6.6-இன்ச் டிஸ்ப்ளேயுடனும்  90Hz ரெஃப்ரஷ் ரேட்டுடனும்  மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டையும்  கொண்டுள்ளது. ரூ.14,999-க்கு கிடைக்கும் இந்த 5G ஸ்மார்ட் ஃபோன், மீடியா டெக் டைமன்சிட்டி  810 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், 50-MP பிரைமரி சென்சார் மற்றும் 8-MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா  செட்டப்பைக்  கொண்டுள்ளது. செல்ஃபிகள்  மற்றும் வீடியோ  கால்ஸ்களுக்காக  16 MP செல்ஃபி  கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் ரேம் பூஸ்டர் அம்சத்தை கொண்டுள்ளது, அதாவது பயன்படுத்தக்கூடிய ரேமை 3GB வரை அதிகரிக்கிறது.

மிகக்குறைந்த விலையில் அறிமுகமாகும் Redmi A1+

2. ரியல்மி 9i (REALME 9I): 
ரியல்மி தரப்பில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் ரியல்மி 9i 18W சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5,000mAh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது ரூ.14,999 ஆரம்ப விலையில் கிடைக்கிறது.
ரியல்மி 9i மொபைல், 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன் மற்றும் 90Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் வருகிறது. இந்த டிவைஸ் டைமன்சிட்டி 810 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

பரிதாப நிலையில் iPhone பயனர்கள்.. டிசம்பர் வரை 5ஜி வேலைசெய்யாதாம்!

3. போக்கோ எம்4 5ஜி (POCO M4 5G):  
ரூ.10,999-க்கு கிடைக்கும் இந்த 5ஜி மொபைல் 90Hz ரெஃப்ரஷ் ரேட்டும் 6.58-இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடனும் வருகிறது. போக்கோ M4 5G மொபைலானது ஆக்ட்டா-கோர் மீடியா டெக் டைமன்சிட்டி  700 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. 4GB, 6GB ரேமுடன் வரும் இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 12-ல் இயங்குகிறது மற்றும் 18W சார்ஜிங் ஸ்பீடை சப்போர்ட் செய்யும் 5000mAh பேட்டரியைக்  கொண்டுள்ளது. பின்பக்கத்தில் டூயல் கேமரா (50 MP + 2 MP (f/2.4)) செட்டப்பை கொண்டுள்ளது.  செல்ஃபிக்களுக்காக முன்பக்கத்தில் 8 MP கேமரா உள்ளது.
 

click me!