Google Pixel 7 ஸ்மாடர்போன்களுக்கு சரியான ஆஃபர்!

By Dinesh TG  |  First Published Oct 7, 2022, 1:18 PM IST

இந்தியாவில் கூகுள் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமான நிலையில், தற்போது ஆஃபரில் மிகக்குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
 


ஆண்ட்ராய்டு தளத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் கூகுள் பிக்சல் ஆகும். இதற்கு முன்பு உலகளவில் அறிமுகமான கூகுள் பிக்சல்  5,6 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகவில்லை. பின்பு, இந்தாண்டு கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் அறிமுகமாகவும் போது, இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு கூடியது. 
அதன்படி, தற்போது கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  ஆரம்ப விலையாக பிக்சல் 7 ஸ்மார்டபோன் 59,999 ரூபாய் என்றும், பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை 84,999 ரூபாய் என்றும் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த நிலையில், பிக்சல் 7 ஸ்மார்ட்போன்களுக்கு வங்கி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் HDFC வங்கி வாடிக்கையாளர்களாக இருந்தால், உங்கள் வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி, 59,999 ரூபாய் மதிப்பிலான பிக்சல் 7 ஸ்மார்ட்போனை வெறும் 49,999 ரூபாய்க்கு வாங்கலாம். 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை 69,999 ரூபாய்க்கு வாங்க முடியும். இதற்கான முன்பதிவுகள் தற்போது நடைபெறுகின்றன.

Latest Videos

உங்களுக்கு Airtel 5G கிடைக்கவில்லையா? கொஞ்சம் இத பாருங்க..

பிக்சல் 7 ஸ்மார்ட்போனில் டூயல் கேமராவும், பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் டிரிப்பிள் கேமராவும் இருக்கலாம் உள்ளன. இரண்டு கேமராவிலும் 50 மெகாபிக்சல் ஐசோ செல் GN1 மெயின் கேமரா சென்சார்கள், 12 மெகா பிக்சல் சோனி Sony IMX381 அல்ட்ராவைடு கேமராக்கள் உள்ளன. டென்சார் ஜி2 சிப் பொறுத்தப்பட்டுள்ளது.

இனி 4K வீடியோ பாக்கனும்னா காசு கொடுக்கனும்! Youtube அட்டகாசம்

ஐபோன் மட்டுமில்லாமல் ஆண்ட்ராய்டில் தரம் வாய்ந்த ஸ்மார்ட்போனும் அதிகவிலையில் உள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் சீரிஸ் விலை 1 லட்சத்தை தாண்டிவிட்டது. Z Fold போனின் விலை 1.55 லட்சம் ஆகும். இப்படியான சூழலில், கூகுளின் பிக்சல் 7 ஸ்மார்ட்போனும் விலையில் ஆஃபர் அறிவிக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

click me!