Samsung S23 Ultra Price: விரைவில் அறிமுகமாகும் ப்ரீமியம் 5ஜி ஸ்மார்ட்போன்

Published : Oct 05, 2022, 12:38 PM IST
Samsung S23 Ultra Price: விரைவில் அறிமுகமாகும் ப்ரீமியம் 5ஜி ஸ்மார்ட்போன்

சுருக்கம்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், samsung s23 ultra price, S23 ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த 2023 ஆம் ஆண்டு வருவதற்கு இன்னும் ஒருசில மாதங்கள் மட்டுமே உள்ளதால், சாம்சங் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும், ஸ்மார்ட்போனின் தோற்றம் எப்படி இருக்கும் என்பது குறித்து சில இணையதளங்களில் தகவல்கள் வந்துள்ளன. 

அதன்படி, Galaxy S22 Ultra ஸ்மார்ட்போனில் இருந்த கேமரா அமைவிடங்களில் சிறுசிறு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு, S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இருப்பதாக தெரிகிறது. அல்ட்ரா வேரியண்ட் தவிர அனைத்து S23 மாடல்களிலும் பேட்டரி சக்தியின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

5ஜி வந்துவிட்டது.. பட்ஜெட் விலையில், அமேசான் ஆஃபரில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்!

பேட்டரி திறன்:

GalaxyClub என்ற தளத்தில் வெளிவந்த அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடுகையில்,  கேலக்ஸி 23 ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரி சக்தியானது 3,900mAh ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் S22 Plus ஸ்மார்ட்போனில் இருந்ததை விட S23 Plus ஸ்மார்ட்போனல் 200mAh அதிகப்படுத்தப்பட்டுள்ளது.  S23 Ultra ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரி திறன் குறித்து தெளிவான விவரங்கள் வரவில்லை. 

கேமரா தரம்:

இதற்கு முன்பு  S22 Ultra ஸ்மார்ட்போனில் 108MP கேமரா வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனில் 200MP பிரைமரி கேமரா இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கேமராவின் சென்சார் குறித்த விவரங்கள் வெளிவரவில்லை.  

வந்துவிட்டது Moto G72.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..

S23 , S23 Plus ஸ்மார்ட்போனில் 12MP அல்ட்ரா-வைட் கேமரா இருப்பதாகவும், S22 மாடல்களில் காணப்படும் அதே 10MP டெலிபோட்டோ கேமரா Galaxy S23, S23 Plus மாடல்களில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

சாம்சங் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போனை குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு அதிரடி சரவெடி ஆஃபர் வழங்கிய அம்பானி.. ரூ.799க்கு அசத்தலான போன்
ஆஹா.. இப்படி ஒரு ஆஃபரா..! இனி வீட்டுக்கு வீடு BSNL தான்.. 11 மாதத்திற்கான அட்டகாசமான பிளான்