வந்துவிட்டது Moto G72.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..

By Dinesh TG  |  First Published Oct 3, 2022, 5:42 PM IST

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனை  இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குப் பார்க்கலாம்.


நியாயமான விலையில், நல்ல தரமான சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது புதிதாக மோட்டோ ஜி72 என்ற ஸ்மார்ட்போனை இன்று அறிமுகப்படுத்தியது. 

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் , மீடியாடெக் ஜி99 SoC பிராசர் உள்ளது. இது 120Hz ரெவ்ரஷ் ரேட், 576 ஹெர்ட்ஸ் டச் சாம்பிள் ரேட், 6.6-இன்ச் pOLED டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் முன்பக்கம் 16MP கேமராவும், பின்பக்கம் 108MP ட்ரிப்பிள் கேமராவும் உள்ளன. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளமும், 30W அதிவேகமான சார்ஜிங் வசதி, 5,000mAh பேட்டரி உள்ளன.

Latest Videos

IRCTC: இனி Whatsapp மூலமாகவே ரயில்கள் வரும் நிலையம், வருகை நேரம், PNR ஸ்டேட்டஸ் அறிந்துகொள்ளலாம்!

மேலும், ஹைப்ரிட் microSD கார்டு ஸ்லாட், டூயல் சிம், 4G LTE, Wi-Fi, ப்ளூடூத் v5.1, GPS/AGPS ஆகியவை உள்ளன. போர்டில் உள்ள சென்சார்களில், ஆக்ஸிலேட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார், லைட் சென்சார், திசைகாட்டி, அண்டர் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவை உள்ளன.

Moto G72 ஸ்மார்ட்போனானது ஒரே பதிப்பாக வந்துள்ளது. 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ் ஆகும். இது போலார் ப்ளூ, சாம்பல் வண்ணங்களில் கிடைக்கும். அக்டோபர் 12 அன்று மதியம் 12 மணிக்கு Flipkart ஆன்லைன் ஷாப்பிங்கில் விற்பனைக்கு வருகிறது.

வெறும் ரூ.8 ஆயிரத்தில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஜியோ?

இதன் விலை ₹18,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பண்டிகை காலம் என்பதால் ஆஃபர் விலையில் ₹14,999க்கு விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வரையறுக்கப்பட்ட கால அறிமுக சலுகைகளும் அடங்கும். குறிப்பிட்ட வங்கி கார்டுகளுக்கு ₹3,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் ₹1,000 உடனடி தள்ளுபடி ஆகியவையும் இதில் அடங்கும்.

click me!