சாம்சங் நோட் புக் 3 ப்ரோ மாடல் லேப்டாப்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samsung நிறுவனம் இந்த ஆண்டு இந்தியாவில் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360, கேலக்ஸி புக் 2 ப்ரோ , கேலக்ஸி புக் 2 360, கேலக்ஸி புக் 2, கேலக்ஸி புக் 2 பிசினஸ் மற்றும் கேலக்ஸி புக் கோ ஆகியவற்றை ரூ.38,990க்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த லேப்டாப்களுக்கு இந்தியா உட்பட உலக நாடுகளில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
விபரீதம் அறியாமல் தலையணைக்கு அடியில் ஸ்மார்ட்போன் வைத்துவிட்டு தூங்கினால் இப்படி தான் ஆகும்!
undefined
நோட் புக் 2 வெற்றியைத் தொடர்ந்து, தற்போது நோட் புக் 3 சீரிஸை சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அதன்படி, Samsung Galaxy Book 3 Ultra ஆனது புளூடூத் SIG சான்றிதழில் நான்கு வெவ்வேறு மாடல் எண்களுடன் காணப்பட்டது, அத்துடன் மொத்தம் ஐந்து தயாரிப்புகள் Samsung Galaxy Book 3 Ultra என பட்டியலிடப்பட்டுள்ளன.
கேலக்ஸி புக் 3 அல்ட்ரா விண்டோஸ் 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்றும், வைஃபை 6E ஆதரவுடன் intel CPU இருக்கும் என்றும் இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. Ultra Moniker புளூடூத் SIG சான்றிதழின் படி, சாம்சங் கேலக்ஸி புக் 3 அல்ட்ராவை கேலக்ஸி புக் வரிசையில் முதல் அல்ட்ரா மாடலாக அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி போன்களை 10,000 ரூபாய்க்கு வழங்க வாய்ப்பில்லை.. சியோமி தலைவர்..!
தற்போதைய நிலவரப்படி, சாம்சங் எஸ் சீரிஸ் மட்டுமே "அல்ட்ரா" மாடலைக் கொண்டுள்ளது. அது தரத்தில் நற்பெயர் பெற்றது. அதே போல், வரவிருக்கும் கேலக்ஸி புக் 3 அல்ட்ரா ஒரு சிறந்த மடிக்கணினியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இத்தனை அம்சங்களுடன் கூடிய லேப்டாப்பின் விலை சற்று அதிகமாக இருக்கலாம்.
சாம்சங்கைப் பொறுத்தவரையில் அதன், 360 ப்ரோ மாடல் லேப்டாப் விற்பனையில் சக்கை போடு போட்டது. அதை போன்று சாம்சங் நோட் 3 ப்ரோ 2 லேப்டாப் மாடல்களும் அதிகமான விற்பனையிலிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.