நாட்டில் குல்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸருடன் இயங்கும் முதல் ஸ்மார்ட் போனாக IQOO z6 lite 5G அறிமுகப்படுதத்தப்பட்டுள்ளது. இந்த போன் அமேசான் மற்றும் IQOOன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் நாளை முதல் விற்பனை செய்யப்படுகிறது.
IQOO நிறுவனம் குறைந்த விலையில் Z6 லைட் 5ஜி ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இது சர்வதேச சந்தையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். புதிய IQOO Z6 லைட் 5ஜி மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 50MP பிரைமரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
IQOO Z6 Lite 5G மொபைல் 8.25mm தடிமன் மற்றும் 194g எடை கொண்டது. இது 6.58-இன்ச் FHD+(2408×1080) LCD டிஸ்பிளேவுடன் 120Hz ஸ்கிரீன் ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 240Hz டச் சேம்பிளிங் சப்போர்ட்டுடன் வருகிறது. இந்த டிவைஸ் புதிய Snapdragon 4 Gen 1 SoC ப்ராசஸரால் இயக்கப்படுகிறது மற்றும் 6GB வரை LPDDR4X ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மேலும் இந்த ஃபோனில் ஹைப்ரிட் சிம் ஸ்லாட் கொடுக்கப்பட்டு உள்ளது.
undefined
இந்த போனில் ஒரே நேரத்திரல் 2 சிம் கார்டுகளை பயன்படுத்தலாம். அல்லது இரண்டாவது சிம் ஸ்லாட்டில் மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்த அனுமதிக்கும். இந்த செல்போனில் 4 காம்போனென்ட் கூலிங் சிஸ்டம் உள்ளது. இது நீண்ட நேரம் திரைப்படங்களைப் பார்க்க மற்றும் கேமிங் பார்க்கும் போது டிவைஸ் ஹீட் ஆகாமல் கூலிங்காகவே இருக்க உதவும். இந்த செல்போன் ஆண்டிராய்டு 12 அடிப்படையிலான Funtouch OS 12ல் இயங்குகிறது.
IQOO Z6 Lite 5G மொபைலின் 4 GB ரேம் + 64 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.13,999-ஆகவும், 6 GB ரேம் + 128 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.15,499-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் நாளை பகல் 12:15 மணிக்கு அமேசான் மற்றும் IQOO-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்ல் விற்பனை செய்யப்படுகிறது.