ரெட்மி நிறுவனம் 11வது பதிப்பிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், விலை, தரம் உள்ளிட்ட விவரங்களை இங்குக் காணலாம்.
ரெட்மி நிறுவனம் 11வது பதிப்பிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
6.58 இன்ச் அளவிலான Full HD திரை, 90Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரிலா கிளாஸ், சன்லைட் டிஸ்ப்ளே உள்ளன. இந்த ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனில், விலைக்கு தகுந்தாற் போல், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசசர் உள்ளது. 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி, அதேபோல் 6ஜிபி ரேம், 128 ஜிபி ரேம் என இரண்டு வேரியண்டுகளில் விற்பனைக்கு வருகிறது.
கேமராவைப் பொறுத்தவரையில், பின்பக்கத்தில் 50MP மெயின் கேமரா, 2MP டெப்த் கேமரா உள்ளன. முன்பக்கத்தில் 8MP அளவிலான கேமரா உள்ளது. முன்பக்க, பின்பக்க கேமரா மூலம் 1080P வரையில் வீடியோ ரெக்கார்டு செய்யலாம்.
5000mAh பேட்டரியும், டைப் சி கேபிளும் கொடுக்கப்பட்டுள்ளது. 18W வேகமான சார்ஜிங் செய்யும் அம்சமும், அதற்கு ஈடாக 22.5W சார்ஜரும் உள்ளது. பக்கவாட்டில் விரல் ரேகை சென்சாரும், செயற்கை நுண்ணறிவு முகமறிதல் மூலம் அன்லாக் செய்யும் வசதியும் உள்ளது.
டூயல் 5ஜி சிம்கார்டு இதில் இயங்கும். 5ஜியைப் பொறுத்தவரையில் (nsa) n1 n3 n40 n78 (sa) n1 n3 n5 n8 n28 n40 n78 ஆகிய அலைவரிசைகளுக்கு 5ஜி ஆதரிக்கும்.
மொத்தத்தில் எப்படி இருக்கு?
Redmi 11 Prime 5g ஸ்மார்ட்போனில் HDR டிஸ்ப்ளே கிடையாது. திரையின் வெளிச்சமும் குறிப்பிட்ட அளவிலே உள்ளது. வெயிலில் செல்லும் போது திரை வெளிச்சம் பெரிய அளவிற்கு எதிர்பார்க்க முடியாது. ஸ்பீக்கர் ஒலி சத்தமாக இருந்தாலும், ஒரேயொரு ஸ்பீக்கர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ கேமராவில் ஸ்டெபிலேஷன் அம்சம் இல்லை. எனவே, நடக்கும் போது வீடியோ எடுத்தாலோ, அல்லது பயணத்தின் போது வீடியோ எடுத்தாலோ, வீடியோ நிலைத்தன்மை இல்லாமல், துல்லியத்தன்மை இல்லாமல் தெரியும்.
விலை:
4GB+64GB வேரியண்ட் 13,999 ரூபாய்க்கும், 6GB+128GB ஸ்மார்ட்போன் 15,999 ரூபாய்க்கும் விற்கப்பட உள்ளது. இந்த விலைக்கு தகுந்தாற் போல் ஃபோனின் அம்சங்களும் உள்ளன. பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த Redmi 11 Prime 5G ஏற்றது.