மிகக் குறைந்த விலையில் சாம்சங் 5ஜி போன்... எப்போ வெளியாகுது தெரியுமா?

By Kevin KaarkiFirst Published Jul 6, 2022, 3:14 PM IST
Highlights

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி M13 4ஜி வேரியண்ட் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை கொண்டு இருக்கிறது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி M13 4ஜி மற்றும் கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களின் இந்திய வெளியீட்டை உறுதிப் படுத்தி இருக்கிறது. அதன் படி சாம்சங் கேலக்ஸி M13 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் ஜூலை 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன. இது தவிர இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் வெளியீட்டை உணர்த்தும் டீசரையும் சாம்சங் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்: ரூ. 109 விலையில் புது ரிசார்ஜ் பேக் அறிவித்த ஏர்டெல்..!

டீசர்களின் படி சாம்சங் கேலக்ஸி M13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இன்பினிட்டி வி நாட்ச் வழங்கப்பட்டு இருக்கும் என தெரியவந்துள்ளது. முன்னதாக மே மாத வாக்கில் மெக்சிகோவில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி M13 சீரிசை விட இதன் இந்திய வேரியண்ட் சற்றே வித்தியாசமாக காட்சி அளிக்கிறது. சாம்சங் கேலக்ஸி M13 4ஜி வேரியண்ட் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை கொண்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்: அசுஸ் ரோக் போன் 6 இந்திய விலை அறிவிப்பு... விற்பனை எப்போ தெரியுமா?

இந்த வேரியண்ட் பிளாக் மற்றும் கிரீன் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. சாம்சங் கேலக்ஸி M13 5ஜி மாடலில் டூயல் கேமரா சென்சார்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிரீன் மற்றும் பிரவுன் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 11 5ஜி பேண்ட்கள் வழங்கப்படலாம். இத்துடன் ரேம் பிளஸ் வசதியும் வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: மாஸ் காட்டிய ஆய்வாளர்கள்.. வைரஸ் கிறுமிகளை கொன்று குவிக்கும் என்95 மாஸ்க் கண்டுபிடிப்பு..!

புதிய சாம்சங் கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் ஆட்டோ டேட்டா ஸ்விட்ச்சிங் அம்சம் உள்ளது. இந்த அம்சம் பிரைமரி சிம் நெட்வொர்கில் இல்லாத பட்சத்திலும் இணைப்பில் இருக்க வழி செய்யும். இத்துடன் கேலக்ஸி M13 5ஜி மாடலில் 5000mAh பேட்டரியும், கேல்கஸி M13 4ஜி மாடலில் 6000mAh பேட்டரி வழங்கப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட இருக்கிறது. இரண்டு புது சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களும் அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. வரும் நாட்களில் இரு ஸ்மார்ட்போன்களின் இதர விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.

click me!