50MP டூயல் கேமராவுடன் விவோ Y22 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Published : Sep 13, 2022, 05:51 PM IST
50MP டூயல் கேமராவுடன் விவோ Y22 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

சுருக்கம்

விவோ நிறுவனம் பக்கவாட்டில் சென்சார் வசதி கொண்ட புதிய  Y சீரிஸ்  ஸ்மார்ட் போன் மாடலை இந்திய சந்தையைில் அறிமுகம் செய்து இருக்கிறது.  

ஸ்லிம் மொபைல் வரிசையில் விவோ நிறுவனத்தின் Y 22 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய விவோ Y 22 ஸ்மார்ட்போனி்ல் 6.55 இன்ச் HD+ ஹாலோ ஸ்பிளே, 50 எம்பி டூயல் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளிட்ட வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும் மீடியாடெக்`ஹீலியோ ஜி70 பிராசசர், அல்ட்ரா கேம் மோட், ஆண்டிராய்டு 12 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12, IP5X டஸ்ட், IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2.5டி வளைந்த டிசைன், மேம்பட்ட சர்பேஸ் டெக்ஸ்சரிங் டெக்னிக் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.  

Flipkart பிக் பில்லியன் டே மூலம் Poco M5 விற்பனை ஆரம்பம்!

புதிய விவோ Y22 ஸ்மார்ட்போன் ஸ்டாலிட் புளூ மற்றும் மெட்டாவெர்ஸ் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4  ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.14 ஆயிரத்து 499 என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விற்பனை விவோ இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது. இதே போன்று 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

PREV
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு அதிரடி சரவெடி ஆஃபர் வழங்கிய அம்பானி.. ரூ.799க்கு அசத்தலான போன்
ஆஹா.. இப்படி ஒரு ஆஃபரா..! இனி வீட்டுக்கு வீடு BSNL தான்.. 11 மாதத்திற்கான அட்டகாசமான பிளான்