எல்.சி.டி. கன்சோல் கொண்ட டி.வி.எஸ். ரேடியான் - ரூ. 59 ஆயிரம் விலையில் அறிமுகம்..!

By Kevin KaarkiFirst Published Jun 30, 2022, 8:34 PM IST
Highlights

டி.வி.எஸ். நிறுவனம் புதிய ரேடியான் மோட்டார்சைக்கிள் 15 சதவீதம் வரை சிறப்பான மைலேஜ் வழங்கும் என தெரிவித்து இருக்கிறது. 

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரேடியான் மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்து புது மாடலாக அறிமுகம் செய்து இருக்கிறது. டி.வி.எஸ். நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் கம்யுட்டர் மாடலின் புதிய விலை தற்போது ரூ. 59 ஆயிரத்து 925 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 71 ஆயிரத்து 966 ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்: மலிவு விலையில் புது எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் எம்ஜி மோட்டார் - வெளியான ஸ்பை படங்கள்..!

அம்சங்கள்:

கம்யுட்டர் பிரிவு இரு சக்கர வாகனங்களில் முதல் முறையாக மல்டி கலர் ரிவர்ஸ் எல்.சி.டி. கிளஸ்டர் கொண்ட மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை புதிய டி.வி.எஸ். ரேடியான் பெற்று இருக்கிறது. இந்த எல்.சி.டி. யூனிட்டில் ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர் உள்ளது. இத்துடன் டி.வி.எஸ். நிறுவனத்தின் சொந்த டி.வி.எஸ். இண்டெலிகோ சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மோட்டார்சைக்கிள் பியூவல் பயன்பாட்டை சிறப்பாக கையாளும் திறன் கொண்டு இருக்கிறது. இத்துடன் புதிய மேம்பட்ட மாடலில் யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது.

இதையும் படியுங்கள்: ரூ. 72 லட்சம் விலையில் பி.எம்.டபிள்யூ. ஸ்பெஷல் எடிஷன் கார் அறிமுகம்... என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

புதிய எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரில் கடிகாரம், சர்வீஸ் இண்டிகேட்டர், லோ பேட்டரி இண்டிகேட்டர், டாப் ஸ்பீடு, அவரேஜ் ஸ்பீடு என ஏராளமான அம்சங்கள் உள்ளன. நீண்ட நேர ஐட்லிங்கின் போது இண்டெலிகோ அம்சம் என்ஜினை ஸ்விட்ச் ஆப் செய்து விடும். இது காற்று மாசு அளவை குறைப்பதோடு, வாகனத்தில் உள்ள எரிபொருளையும் சேமிக்கிறது. இவ்வாறு என்ஜின் ஆப் ஆன பின் லேசாக திராட்டில் செய்தாலே என்ஜின் மீண்டும் ஸ்டார்ட் ஆகி விடும். 

இதையும் படியுங்கள்: மிக குறைந்த விலையில் புது மாருதி சுசுகி பிரெஸ்ஸா அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

என்ஜின் விவரங்கள்:

இவை தவிர புதிய மேம்பட்ட ரேடியான் மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் சவுகரியமான சீட், பிலஷ் சஸ்பென்ஷன், ஹெட்லேம்ப் மற்றும் ரியர் வியூ கண்ணாடிகளில் குரோம் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 109.7சிசி சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8 ஹெச்.பி. பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டு இருக்கிறது.

டி.வி.எஸ். நிறுவனம் புதிய ரேடியான் மோட்டார்சைக்கிள் 15 சதவீதம் வரை சிறப்பான மைலேஜ் வழங்கும் என தெரிவித்து இருக்கிறது. இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் இகோ-திரஸ்ட் பியூவல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பம் இதற்கு வழி வகுக்கும் என டி.வி.எஸ். நிறுவனம் தெரிவித்து உள்ளது. புதிய ரேடியான் மாடல் மொத்தம் நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் - ஸ்டிரெயிட் புளூ, மெட்டல் பிளாக், ராயல் பர்பில் மற்றும் டைட்டானியம் கிரே நிறங்களில் கிடைக்கிறது.

இதன் டூயல் டோன் வேரியண்ட்கள் ரெட் மற்றும் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய டி.வி.எஸ். ரேடியான் மாடல் ஹீரோ பேஷன் ப்ரோ, ஹோண்டா லிவோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

click me!