தேர்தலில் கமலை வெற்றி பெற்றதற்கு மகிழ்கிறேன்..! விக்ரம் படத்தை பார்த்து கிண்டலாக வாழ்த்து தெரிவித்த வானதி

Published : Jul 05, 2022, 10:13 AM ISTUpdated : Jul 05, 2022, 10:14 AM IST
தேர்தலில் கமலை வெற்றி பெற்றதற்கு மகிழ்கிறேன்..! விக்ரம் படத்தை பார்த்து கிண்டலாக வாழ்த்து தெரிவித்த வானதி

சுருக்கம்

விக்ரம் படத்தை பார்த்து கமலுக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக சட்ட மன்ற உறுப்பினர் வானதி ஶ்ரீனிவாசன், கமலின் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

விக்ரம் படத்திற்கு குவியும் வாழ்த்து

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு மாதங்களை கடந்தும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.  இந்த படத்தின் வெற்றியால் நீண்ட நாட்களுக்கு பிறகு கமல் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு புதிய கார், உதவி இயக்குனர்களுக்கு பைக், நடிகர் சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் ஆகியவற்றை பரிசாக வழங்கி மகிழ்ந்தார். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், பல முன்னனி நடிகர்களும் கமலுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு வெளியிட்டுள்ள வாழ்த்தில் லெஜெண்ட் கமல்சாரைப் பற்றி விமர்சனம் எழுத எனக்கு தகுதி கிடையாது. அவரின் மிகப்பெரிய ரசிகன் என்ற அடிப்படையில் இது எனக்கு பெருமை மிகுந்த தருணம். கமல்சார் உங்ளுக்கும், உங்களது டீமுக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார்.

BIGG BOSS: பிக்பாஸ் சீசன் 6-ன் முதல் போட்டியாளர் குக் வித் கோமாளி ரக்‌ஷனா..? அட...ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.?

விக்ரம் டீமுக்கு..தனித்தனியாக வாழ்த்து சொன்ன தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மகிழ்கிறேன்

இந்தநிலையில் விக்ரம் படத்தை பாஜக சட்டமன்ற உறுப்பினரும், கோவை தெற்கு தொகுயில் கமலை தோற்கடித்த வானதி ஶ்ரீனிவாசன் தனது குடும்பத்தோடு சென்று பார்த்துள்ளார். இந்த படத்தை பார்த்துவிட்டு தற்போது டுவிட்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன். விக்ரம் திரைப்படம் பார்த்தேன். உங்கள் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துகள் என கூறியுள்ளார். சட்ட மன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்,  கமல் மற்றும் வானதிஶ்ரீனிவாசன் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. கடைசி நேரத்தில் 1358 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி ஶ்ரீனிவாசன் வெற்றி பெற்றார். ஒரு வேளை தேர்தலில் கமல் வெற்றி பெற்றிருந்தால் விக்ரம் போன்ற படத்தில் கமல் நடித்திருப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது எனவே தான் தேர்தலில் கமலை வீழ்த்தியதற்காக மகிழ்ச்சி அடைவதாக வானதி ஶ்ரீனிவாசன் பதிவிட்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

பாஜக முக்கியத்துவம் கொடுப்பது ஓபிஎஸ்க்கா..? இபிஎஸ்க்கா..?மாநில செயலாளர் பேச்சால் பரபரப்பு
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்? பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!