தமிழகத்தில் நாளுக்கு நாள் உயரும் கொரோனா… ஒரே நாளில் 2,654 பேருக்கு தொற்று!!

Published : Jul 04, 2022, 08:34 PM IST
தமிழகத்தில் நாளுக்கு நாள் உயரும் கொரோனா… ஒரே நாளில் 2,654 பேருக்கு தொற்று!!

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,672 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,654 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,672 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,654 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,066 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,066 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,026 ஆகவே உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,616 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,542 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,31,787 ஆக உள்ளது.

மாவட்ட வாரியாக: அரியலூர் 9, செங்கல்பட்டு 375, சென்னை 1,066, கோயம்புத்தூர் 144, கடலூர் 15, தர்மபுரி 7, திண்டுக்கல் 8, ஈரோடு 30, கள்ளக்குறிச்சி 11, காஞ்சிபுரம் 79, கன்னியாகுமரி 78, கரூர் 4, கிருஷ்ணகிரி 19, மதுரை 51, மயிலாடுதுறை 3, நாகப்பட்டிணம் 4, நாமக்கல் 24, நீலகிரி 10, பெரம்பலூர் 18, புதுகோட்டை 11, ராமநாதபுரம் 5, ராணிப்பேட்டை 37, சேலம் 40, சிவகங்கை 15, தென்காசி 33, தஞ்சாவூர் 17, தேனி 4, திருப்பத்தூர் 5, திருவள்ளூர் 133, திருவண்ணாமலை 26, திருவாரூர் 8, தூத்துக்குடி 71, திருநெல்வேலி 80, திருப்பூர் 20, திருச்சி 102, வேலூர் 6, விழுப்புரம் 26, விருதுநகர் 50 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 16 January 2026: Ritu Varma - பட்டுச் சேலையில் வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தோன்றும் லுக்கில் நடிகை ரிது வர்மா! சூப்பர் கிளிக்ஸ்!!
சங்கே முழங்கு.. 2026-ல் பாருங்க! சங்கி குழுவுடன் தமிழ்நாடே இணையப் போகுது.. தமிழிசை சவால்!