இதை செய்யாமல் டிக்கெட் கொடுங்கள்... நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு!!

Published : Jul 04, 2022, 07:01 PM ISTUpdated : Jul 04, 2022, 07:04 PM IST
இதை செய்யாமல் டிக்கெட் கொடுங்கள்... நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு!!

சுருக்கம்

பேருந்தில் கண்டெக்டர்கள் எச்சில் தொடாதவாறு பயணிகளுக்கு பயண சீட்டு வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. 

பேருந்தில் கண்டெக்டர்கள் எச்சில் தொடாதவாறு பயணிகளுக்கு பயண சீட்டு வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. இது மேலும் உயர்ந்து கடந்த சில நாட்களாக 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,670 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 82 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: இலங்கை கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது.. கடலோரப்‌ பகுதிகளில்‌ பாதுகாப்பின்மை அச்சுறுத்தல்..முதலமைச்சர் கடிதம்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1,072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பேருந்தில் கண்டெக்டர்கள் எச்சில் தொடாதவாறு பயணிகளுக்கு பயண சீட்டு வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தை திருட்டு! கட்டப்பையில் வைத்து கொண்டு சென்ற பெண்.?தட்டி தூக்கிய போலீஸ்

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் போது நடத்துநர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. அதில் பேருந்தில் பயணச்சீட்டு வழங்கும் போது சில நடத்துநர்கள் எச்சில் தொட்டு பயணச்சீட்டுகளை பிரித்தெடுத்து பொதுமக்களிடம் வழங்குவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குவதால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சுகாதார சீர் கேடு விளைவிக்கும் என்பதால் அதனை முற்றிலும் தடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர். பயணச்சீட்டு வழங்கும் போது நடத்துநர்கள் தண்ணீர் உறிஞ்சும் ஸ்பாஞ்சை பயன்படுத்தி வழங்க வேண்டும், மாறாக நடத்துநர்கள் பயணிகளுக்கு எச்சில் தொடாதவாறு பயண சீட்டு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

உளவுத்துறை சர்வே ஷாக்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? திமுகவுக்கு கடும் அதிர்ச்சி..! அடிச்சுத்தூக்கும் தவெக..!
ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி