Viral Video : கஞ்சா போதையில் இளைஞர்கள் தஞ்சாவூரில் அட்டகாசம்.. வைரல் வீடியோ !

By Raghupati R  |  First Published Jul 4, 2022, 4:48 PM IST

Viral Video : ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடவடிக்கையின் கீழ் கஞ்சா புழக்கத்தை ஒழிப்பதற்கான பணிகளில் காவல்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது.


கஞ்சா ஒழிப்பு

தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் போலீஸ் இறங்கியுள்ளது. ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டத்தின் கீழ் கஞ்சா வியாபாரிகளையும், விநியோகம் செய்யும் நபர்களையும் சுற்றி சுற்றி பிடித்து வருகிறது காவல்துறை. அந்த வகையில் தலைநகர் சென்னையில் அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டு கிலோ கணக்கில் கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

Latest Videos

மேலும் செய்திகளுக்கு.. செம ட்விஸ்ட்.! திரெளபதிக்கு ஓட்டு போடும் பிரேமலதா & சுதீஷ்.. எந்த பதவியிலும் இல்லையே எப்படி?

தஞ்சாவூரில் இளைஞர்கள் அட்டகாசம்

கஞ்சா போதைக்கு அடிமையான சிறுவர்கள்,இளைஞர்கள் செயின் பறிப்பு, திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. தஞ்சாவூரில் நாளுக்கு நாள் கஞ்சா போதையில் சுற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் திமுக ஆட்சி அமைந்த பிறகு தஞ்சாவூரில் கஞ்சா பரவல் அதிகமாக பரவி வருகிறது. சமீபத்தில் கரந்தையில் நடந்த படுகொலைக்கு முக்கிய காரணம் இது என்றும் குற்றஞ்சாட்டுகிறார்கள் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள்.

மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !

கஞ்சா போதையில் கடந்த மாதம் கரந்தை பகுதியில் அரிவாளை காட்டியும், வியாபாரிகளை தாக்கியும் பணம் கேட்டு மிரட்டி தாக்கினர். இதில் ஒரு வியாபாரி மரணம் அடைந்தார்.இந்த நிலையில் மீண்டும் கஞ்சா போதையில் சில சிறுவர்கள் வியாபாரிகளை அடித்து ரவுடியிசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். வியாபாரியை சிறுவர்கள் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவிடம் கோடி கணக்கில் பணம் இருக்கு.. கொள்கை தான் இல்லை - அதிமுகவை கலாய்த்த சீமான்

click me!