Dec 4, 2018, 10:03 AM IST
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் திருநங்கை காவலராக நஸ்ரியா பணியாற்றி வருகிறார். பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து தனது விடா முயற்சியால் சொந்த மாவட்டத்திலேயே பணியாற்றும் வாய்ப்பு பெற்று சாதனை படைத்தவர். இந்நிலையில் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை முயற்சி செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தன் இறப்புக்கு உயரதிகாரிகள் காரணம் என வீடியோ பதிவில் நஸ்ரியா கூறியுள்ளார்.