சுட்டி குழந்தையை மீண்டும் தட்டி தூக்கிய சென்னை: சென்னையில் ஐக்கியமானார் Sam Curren

First Published | Nov 25, 2024, 4:44 PM IST

ஐபிஎல் 2025ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் சாம் கரணை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஏலத்தில் எடுத்துக் கொண்டது.

Chennai Super Kings

Chennai Super Kings: 2025ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவுக்கான ஏலம் சவுதி அரேபியாவில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் நடைபெற்ற ஏலத்தில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். மேலும் வார்னர், பேர்ஸ்டோ உள்ளிட்ட சில அதிரடி வீரர்கள் எந்த அணியாலும் வாங்கப்படாமல் இருந்தனர்.

Chennai Super Kings

இந்நிலையில் இன்றைய ஏலத்தில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான சாம் கரண் ரூ.2 கோடி அடிப்படை விலையில் அறிமுகப்படுத்தப்பட்டார். அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.2.40 கோடிக்கு எலம் எடுத்து தக்கவைத்துக் கொண்டது. 

Tap to resize

Chennai Super Kings

ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா ஏலத்தின் முதல் நாளில் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டது. ராகுல் திரிபாதி, டெவோன் கான்வே, ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் கலீல் அகமது போன்ற சில ஆதிக்கம் செலுத்தும் வீரர்களை ஏலத்தில் எடுத்தது. மேலும் ரூ.10 கோடிக்கு நூர் அகமதுவையும் வாங்கியது.

Chennai Super Kings

சாம் கரணின் தேவை
சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி மற்றும் ரச்சின் ரவீந்திரா போன்ற அதிரடி பேட்டர்களை உள்ளடக்கிய வலுவான டாப்-ஆர்டரைக் கொண்டுள்ளது. ஷிவம் துபே மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் மிடில் ஓவர்களை பார்த்துக் கொள்வார்கள், ஐந்து முறை சாம்பியனான அணிக்கு தங்கள் பக்கத்தை சமநிலைப்படுத்த ஸ்பீடு பௌலிங் வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் தேவை. இதனை மனதில் வைத்து சாம் கரண் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

Chennai Super Kings

சாம் கரண் ஏற்கனவே சென்னை அணிக்காக விளையாடியுள்ள நிலையில் தனது சிறப்பான பந்துவீச்சை பல போட்டிகளிலும், அதிரடியான பேட்டிங்கை சில போட்டிகளிலும் பதிவு செய்துள்ளார். அந்த வகையில் சாம் கரண் சென்னை அணிக்கு நல்ல பிணிஷராக இருப்பார் என்ற என்னத்தில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

Latest Videos

click me!