விலை போகாத நியூசி., கேப்டன் கேன் வில்லியம்சன், சிஎஸ்கே செல்லப்பிள்ளைகள்!

First Published | Nov 25, 2024, 4:31 PM IST

IPL 2025 Auction Unsold Players List : முதல் நாளில் டேவிட் வார்னர் ஏலம் எடுக்கப்படாத நிலையில் 2ஆவது நாளான இன்று யாரெல்லாம் ஏலம் எடுக்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

IPL 2025 Auction, IPL 2025 Auction Unsold Players

IPL 2025 Auction Unsold Players List : 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனை படைத்து வருகின்றனர். முதல் நாளில் ரிஷப் பண்ட் ரூ.27 கோடி, ஷ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடி, வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடி, அர்ஷ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். ஐபிஎல் 2025 ஏலத்தின் 2ஆவது நாளான் இன்றைய முதல் ஏலத்தில் நியூசிலாந்து கேப்டனான கேன் வில்லியம்சனை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வில்லியம்சன் 2023 ஆம் ஆண்டு குஜராத் அணியில் இடம் பெற்றிருந்த நிலையில் முதல் போட்டியிலேயே காயம் காரணமாக வெளியேறினார். 

Kane Williamson Unsold in IPL 2025 Auction

கேன் வில்லியம்சன்:

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே அவருக்கு ஆடும் பிளேயிங் 11ல் இடம் கிடைத்தது. ஆனால், அவர் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை 2 போட்டிகளில் விளையாடி 27 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால், குஜராத் டைட்டன்ஸ் அவரை விடுவித்தது. இதனால் ரூ.2 கோடிக்கு தன்னுடைய பெயரை ஐபிஎல் 2025 ஏலத்திற்கு கொடுத்திருந்த நிலையில், அவரை எந்த அணியும் ஏலம் எடுக்க விரும்பவில்லை. இதுவரையில் 79 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2128 ரன்கள் எடுத்துள்ளார். சன்ரைசரஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாகவும் வில்லியம்சன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos


Ajinkya Rahane Unsold in IPL 2025 Auction

அஜிங்க்யா ரஹானே:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த ரஹானேவை சிஎஸ்கே தக்க வைத்துக் கொள்ளவில்லை. ஆதலால் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்திற்கு ரூ.1.50 அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்தார். ஆனால், அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க விரும்பவில்லை. ரூ.50 லட்சத்திற்கு 2024 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த ரஹானே 13 போட்டிகளில் 242 ரன்கள் எடுத்தார். 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 326 ரன்கள் எடுத்தார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 71* ரன்கள் எடுத்தார்.

Shardul Thakur Unsold in IPL 2025 Auction

ஷர்துல் தாக்கூர்:

சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த ஷர்துல் தாக்கூர் இந்த முறை ஏலம் எடுக்கப்படவில்லை. ரூ.2 கோடியை அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த தாக்கூரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. 2018 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடிய தாக்கூரை 2023ல் கேகேஆர் ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்த சீசனில் சிஎஸ்கே வெறும் 4 கோடிக்கு மட்டுமே ஏலம் எடுத்தது. இந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். ஆதலால் அவரை ஏலம் எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.

Prithvi Shaw Unsold in IPL 2025 Auction

பிருத்வி ஷா:

2018 முதல் 2024 வரையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த பிருத்வி ஷா கடந்த 2 சீசன்கள் முறையே 8 போட்டிகளில் விளையாடி 106 மற்றும் 198 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அவர் மீது விமர்சனம் எழுந்தது. டெல்லியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு போதுமான வாய்ப்புகள் கொடுத்தார். எனினும், அவரால் சோபிக்க முடியவில்லை. இதனால், டெல்லியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் தான் இந்த சீசனில் ரூ.75 லட்சத்திற்கு ஏலத்திற்கு வந்தார். எனினும் அவரை ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

David Warner Unsold in IPL 2025 Auction

இவர்கள் தவிர டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், தேவ்தத் படிக்கல், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ஷாய் ஹோப், அலெக்ஸ் கேரி, கேஎஸ் பரத், பியூஷ் சாவ்லா, கார்த்திக் தியாகி, யாஷ் துள், அன்மோல்ப்ரீத் சிங், உபேந்திரா சிங் யாதவ், ஷ்ரேயாஸ் கோபால், மாயங்க் அகர்வால் ஆகியோர் பலரும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஏலத்தின் 2ஆம் நாளில் பல வீரர்கள் அதிக தொகைக்கு வாங்கப்பட்டனர்.

ஃபாஃப் டு பிளெசிஸ் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) - ரூ.2 கோடி
சாம் கரன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) - ரூ.2.40 கோடி
வாஷிங்டன் சுந்தர் குஜராத் டைட்டன்ஸ் (GT) - ரூ.3.20 கோடி
மார்கோ ஜான்சன் PBKS ரூ.7 கோடி (இரண்டாம் நாளில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர்களில் ஒருவர்)
குர்ணல் பாண்டியா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) - ரூ.5.75 கோடி
நிதிஷ் ராணா ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) - ரூ.4.20 கோடி
ரியான் ரிகெல்டன் மும்பை இந்தியன்ஸ் (MI) - ரூ.1 கோடி
ஜோஷ் இங்கிலிஸ் PBKS - ரூ.2.60 கோடி.

click me!