டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு மரண அடி: இந்தியா அபார வெற்றி

First Published | Nov 25, 2024, 1:49 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Border Gavaskar Trophy

India Vs Australia: இந்தியா, ஆஸ்திரேலியா இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகள் இடையேயான முதலாவது போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி கொடுத்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா எளிதாக 150 ரன்களைக் கடந்து பெரிய ஸ்கோரை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Border Gavaskar Trophy

ஆனால் ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்ந்து கூடுதல் அதிர்ச்சி கொடுத்தது. முதல் இன்னிங்சில் அந்த அணி 104 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் 46 ரன்கள் முன்னிலை பெற்று இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது. 

Latest Videos


Border Gavaskar Trophy

இரண்டாவது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஸ்வால் 161 ரன்களும், கே.எல்.ராகுல் 77 ரன்களும் சேர்த்து ஆட்டம் இழந்தனர். பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழந்த நிலையில் விராட் கோலி நீண்ட இடைவெளிக்கு பின்னர் சதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

Border Gavaskar Trophy

534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமால இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சிலும் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் அதிரடி பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாத ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் வந்தவேகத்தில் நடையை கட்டினர்.

Border Gavaskar Trophy

ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் மட்டும் அதிகபட்சமாக 89 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்களில் ஒருவர் கூட அரைசதம் கடக்கவில்லை. இனால் அந்த அணி 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

சாதனைகள்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவை அதிக ரன்கள் (295) வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா பதிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா மண்ணில் அதிக சதம் அடித்த (7 சதம்) இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் கோலி.

click me!