life-style

மணிகரன், இமாச்சல பிரதேசம்

1829 மீ உயரத்தில் உள்ள மணிகரன், வெப்ப நீரூற்றுகளுக்குப் பிரபலமானது. இங்குள்ள தண்ணீரில் அதிக அளவு யுரேனியம் மற்றும் கந்தகத்தைத் தவிர கதிரியக்க தாதுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Image credits: google

வஜ்ரேஸ்வரி, மகாராஷ்டிரா

மந்தாகினி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள வஜ்ரேஸ்வரி கிராமத்தில் பல வெப்ப நீரூற்றுகள் உள்ளன. இங்குள்ள வெந்நீர் ஊற்றுகளின் வெப்பநிலை 43 முதல் 49 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும். 

Image credits: google

பக்ரேஷ்வர், மேற்கு வங்காளம்

பக்ரேஷ்வர் ஒரு புகழ்பெற்ற யாத்திரை ஸ்தலமாகும். இது 10 வெப்ப நீரூற்றுகளைக் கொண்டுள்ளது. இதில் இயற்கையாகவே சிகிச்சைத் தாதுக்கள் நிறைந்துள்ளன.

Image credits: Google

தப்தா பானி, ஒரிசா

பெர்ஹாம்பூரிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் தப்தபானி வெந்நீர் ஊற்று அமைந்துள்ளது. இந்த இயற்கை நீரூற்றில் உள்ள நீர் தோல் நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் உள்ளது.

Image credits: Google

திங்பு மற்றும் சாச்சு, அருணாச்சல பிரதேசம்

தவாங் மாவட்டத்தில் உள்ள தவாங் - ஜாங் சாலையில் திங்பு மற்றும் சாச்சு வெப்ப நீருற்றுகள் உள்ளது. இங்குள்ள கந்தகம் நிறைந்த நீர் தோல் நோய்களைக் குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

Image credits: Pixabay

யுமேசம்டாங், சிக்கிம்

அழகிய வடக்கு சிக்கிமில், சீன எல்லைக்கு அருகில் உள்ள யுமேசம்டாங் பகுதியில் 14 கந்தக வெப்ப நீரூற்றுகள் உள்ளது.  

Image credits: social media

கௌரிகுண்ட், உத்தராஞ்சல்

கௌரிகுண்ட் 1982 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு புனித நீராடல் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

Image credits: social media

பனாமிக், லடாக்

லடாக்கில் உள்ள பனாமிக் சியாச்சின் பனிப்பாறையின் தொடக்கத்தில் இருந்து சுமார் 9 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நீர் பல மருத்துவ குணங்கள் நிறைந்ததாக நம்பப்படுகிறது.

Image credits: social media
Find Next One