மொபைலில் IMEI நம்பர் என்றால் என்ன? அதைத் தெரிந்துகொள்வது எப்படி?

First Published | Nov 25, 2024, 3:41 PM IST

உங்கள் மொபைல் ஃபோனின் IMEI எண், சர்வதேச அளவில் மொபைல் போன்களுக்கான அடையாள எண் ஆகும். இந்தத் தனித்துவமான எண் பல சந்தர்ப்பங்களில், தொலைந்துபோன செல்போனைக் கண்டறிவதற்கான ஒரு வழியாகவும் இருக்கிறது.

How to find out IMEI Number

உங்கள் மொபைல் ஃபோனின் IMEI எண், சர்வதேச அளவில் மொபைல் போன்களுக்கான அடையாள எண் ஆகும். இந்தத் தனித்துவமான எண் பல சந்தர்ப்பங்களில், தொலைந்துபோன செல்போனைக் கண்டறிவதற்கான ஒரு வழியாகவும் இருக்கிறது.

What is IMEI Number?

நமது அன்றாட வாழ்வில், IMEI எண்ணை நாம் அதிகம் பயன்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் சில நேரங்களில் IMEI எண்ணைத் தெரிந்து வைத்திருப்பது முக்கியமானது. உங்கள் ஸ்மார்ட்போனை மறுவிற்பனை செய்யும்போது அதை வாங்குபவர், ரசீதில் உள்ள IMEI எண்ணுடன் பொருத்திப் பார்க்க முடியும். வாங்கப்படும் மொபைல் திருடப்படவில்லை என்பதை சரிபார்க்க இது உதவுகிறது.

Latest Videos


IMEI Number benefits

எனவே, IMEI எண் திருட்டு வழக்குகளிலும் பயனுள்ளதாக இருக்கும். சட்ட அமலாக்க அதிகாரிகள் குறிப்பிட்ட தொலைபேசியைக் கண்காணிக்க வேண்டிய சூழல் வரும்போது, இதனை பயன்படுத்துவார்கள். ​​உங்கள் ஐபோன் அல்லது ஆண்டிராய்டு ஸ்மார்ட்போனில் IMEI எண்ணைத் தெரிந்துகொள்வது எப்படி? அதற்கு மூன்று வழிககள் உள்ளன. அவற்றைத் இப்போது பார்க்கலாம்.

IMEI Number

உங்கள் ஃபோனைப் பயன்படுத்தாமல், IMEI எண்ணை அறிய, உங்கள் மொபைல் ஃபோன் வாங்கியபோது வழங்கப்பட்ட பெட்டியையில் இருந்து IMEI எண்ணைச் பார்க்கலாம். இது எளிதான வழி. உங்கள் செல்போனை புதிதாக வாங்கும்போது வைத்திருந்த ஒரிஜினல் பெட்டியில்தான் இதைப் பார்க்க வேண்டும்.

IMEI Number

IMEI எண் என்பது 15 இலக்கங்கள் கொண்ட எண்ணாக இருக்கும். உங்களிடம் இரட்டை சிம் தொலைபேசி இருந்தால், இரண்டு 15 இலக்க IMEI எண்கள் இருக்கும். இது சாதனத்தின் பின்புறம் அல்லது அதன் சில மூலையில் இருக்கலாம்.

IMEI Number

உங்களிடம் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு எந்த போன் இருந்தாலும் இந்த முறையைப் பின்பற்றலாம். *#06# என டயல் செய்தால், ஒரு தகவல் பெட்டி திறக்கும். அதில் IMEI எண் இருக்கும். உங்கள் ஃபோன் எத்தனை சிம்களை ஆதரிக்கிறது என்பதைப் பொறுத்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட IMEI எண்கள் இருக்கும்.

IMEI Number

ஆண்டிராய்டு மொபைல்களில் செட்டிங்சில் இருக்கும் About phone என்ற பகுதியில் உங்கள் ஸ்மார்ட்போன் பற்றிய அடிப்படைத் தகவல்கள் இருக்கும். இதில் IMEI எண்ணும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஐபோன் செட்டிங்சில் About என்ற பகுதியில் IMEI எண் காணப்படும்.

click me!